விலை உயர்ந்த பைக்கில் தல அஜித்.! புகைப்படத்தை வெளியிட்டு தெறிக்கவிடும் வலிமை திரைப்படத்தின் வில்லன்.!

0

தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாக வலம் வருகிறார். இவர் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இதற்கு முன் வினோத் இயக்கத்தில் வெளியாகிய நேர்கொண்ட பார்வை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது மக்களிடம்.

அதுமட்டுமில்லாமல் வலிமை திரைப்படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில் வலிமை திரைப்படத்தின் அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. மேலும் வலிமை திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் திரைப்படத்தை காண ஆவலுடன் இருக்கிறார்கள்.

அப்படி இருக்கும் நிலையில் வலிமை திரைப்படத்திலிருந்து சில புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ஒரு புகைப்படம் தான் தல அஜித் மட்டும் கார்த்திகேயா இருவரும் விலை உயர்ந்த பைக்கில் அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ளார்கள் இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பதிவிட்ட  வலிமை திரைப்படத்தின் வில்லன் நடிகர் கார்த்திகேயா என்னைப் பற்றி பெருமையாக நினைத்துக் கொள்ளும் ஒரு சில தருணங்களில் இதுவும் ஒன்று நானும் தல அஜித் சாரும் என சந்தோஷத்துடன் பதிவிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையதளத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

மேலும் வலிமை திரைப்படத்தில் பைக் சேஸிங் காட்சிகளும் கார் சேசிங் காட்சிகளும் இடம் பெற்றிருக்கும் என தகவல் வெளியானது, வலிமை திரைப்படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது இந்த நிலையில் வலிமை திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதோ கார்த்திகேய பதிவிட்ட புகைப்படம்