கொளுத்துடா வெடிய வலிமை ரிலீஸ் தேதி இதுதான்.! அஜித் அதிரடி.

தல அஜித் வலிமை திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது ஆனால் இன்னும் படத்தை பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை இந்த நிலையில் படம் ஒருவழியாக இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.

படப்பிடிப்பை முழுமையாக முடிக்க கடைசி கட்ட படப்பிடிப்பிற்காக இப்படக்குழு அனைவரும் ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல இருக்கிறார்கள். க்ளைமாக்ஸ் காட்சி மட்டும் அங்கு படமாக்க வேண்டிய சூழ்நிலை அமைந்து உள்ளதால் அங்கு செல்ல இருக்கிறார்கள்.

இந்த காட்சிகள் அனைத்தும் முடிவடைந்தவுடன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்தும் மிகவும் வேகமாக துரிதமாக முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதற்குள் வருமா என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

valimai-ajith
valimai-ajith

இந்த நிலையில்  தல அஜித் வலிமை திரைப்படத்தில் உள்ள ஒவ்வொரு விஷயத்தையும் நன்கு கவனித்து வருவதாகவும் அதற்கு காரணம் இருக்கிறது எனவும் அஜித் வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஒரு வருடத்திற்கு மேல் தன்னை பார்க்க காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்களை ஏமாற்றி விடக்கூடாது என்பதற்காக வலிமை திரைப்படத்தை ரசிகர்களுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டுமென ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகிறாராம்.  அதனால் வலிமை திரைப்படம் கண்டிப்பாக ரசிகர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என வினோத்திற்கு கட்டளையிட்டுள்ளார்.

இந்த நிலையில் படக்குழுவினரும் வலிமை திரைப்படத்தின் தயாரிப்பாளரும் அஜித்திடம் ரிலீஸ் குறித்து சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் முதலில் வலிமை திரைப்படம் அஜித் பிறந்தநாளில் வெளியாகும் என சமீபத்தில் செய்திகள் மற்றும் வதந்திகள் பரவி வந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை அஜித் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

வலிமை திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது அதேபோல் வியாழகிழமை செண்டிமெண்டில் தான் திரைப்படம் வெளியாகும் எனவும் அஜித் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

Leave a Comment