தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் பாக்ஸ் ஆபிஸில் வசூல் மன்னன் ஆவார், இவரின் திரைப் படத்தில் நடிப்பதற்காக பல நடிகர்கள் நடிகைகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் ஆனால் அந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்து விடுவதில்லை.
இந்த நிலையில் அஜீத் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தை நேர்கொண்டபார்வை திரைப்படத்தை தயாரித்த போனிகபூர் தான் தயாரிக்கிறார், மேலும் இந்த திரைப்படத்தில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக மிரட்ட இருக்கிறார், இந்த நிலையில் அஜித்தின் வலிமை திரைப்படத்தில் நடிப்பதற்கு பிரணிதி சோப்ராவை தேடிச் சென்றார்கள் படக்குழு ஆனால் அவர் நடிப்பதற்கு மறுத்து விட்டாராம்.
ஏனென்றால் அவர் ஏற்கனவே பல திரைப்படங்களில் நடிப்பதற்காக கமிட் செய்துள்ளாராம் அந்த தேதிகள் அனைத்தும் இந்த திரைப்படத்துக்கு இடைஞ்சலாக இருப்பதால் அஜித்தின் வலிமை திரைப்படத்தை நிராகரிக்கும் முடிவில் இருக்கிறார். பிரணதி சோப்ரா அடுத்ததாக சாய்னா நேவால் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.