கொளுத்துங்கடா வெடியை வலிமை ரிலீஸ் குறித்து வெளியான மாஸ் தகவல்.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் தல அஜித். இவர் நடிப்பில் கடைசியாக நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது.இத்திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடம் மேல் ஆகியும் இதுவரை எந்த திரைப்படமும் இவர் நடிப்பில் வெளி வராத காரணத்தினால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்து வருகிறார்கள்.

அந்தவகையில் அஜித்தும் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வலிமை திரைப்படத்தில் நடித்து வருவதாகவும் இத்திரைப்படத்தைப் வினோத் இயக்க போனிகபூர் தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.  இந்நிலையில் ரசிகர்களும் போகுமிடமெல்லாம் வலிமை அப்டேட் கொடுங்கள் என்று போராடி வந்த நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஹீமா குரோஷி  நடிக்கிறார் என்பது மட்டும் தான் தெரிய வந்தது.

அதன் பிறகு அஜித் மற்றும் தயாரிப்பாளர் இருவரும் ரசிகர்களிடம் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்ததால் தற்போது வரையிலும் ரசிகர்கள் அமைதி காத்து வருகிறார்கள். அதோடு பொதுவாக திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றலாம் ஆனால் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் தேதியை இரண்டு முறை மாற்றியவர்கள் தான் வலிமை படக்குழுவினர்கள்.

அந்த வகையில் தல அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு மே ஒன்றாம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவோம் என்று படக்குழுவினர்கள் கூறி இருந்தார்கள். ஆனால் எதிர் பார்க்க ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் மட்டுமே நிலவியது அதன்பிறகு ரசிகர்களும் எப்பொழுது வந்தாலும் வலிமை திரைப்படத்திற்காக நாங்கள் காத்திருப்போம் என கூறி வருகிறார்கள்.

இந்த லாக் டவுன் நேரத்தில் எதிர்பாராத விதமாக அஜித் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி தரும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது வலிமை திரைப்படம் தீபாவளி பண்டிகை அன்று ரிலீஸ்சாவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாம் விரைவில் படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

Leave a Comment