பிரமாண்ட தொகைக்கு விலை போன அஜித்தின் வலிமை.!! தமிழக திரையரங்கு உரிமையை வெளியிட போவது யார் தெரியுமா.

0

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித் இவர் நடிப்பில் கடைசியாக விஸ்வாசம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அந்த வகையில் ஒரு வருடத்திற்கு மேலாகியும் அஜித் நடிப்பில் எந்த படமும் ரிலீஸ் ஆகாது காரணத்தினால் ரசிகர்கள் பெரும் துன்பத்திலிருந்து வந்தார்கள்.

அந்த வகையில் வலிமை திரைப்படத்தில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேல் தல அஜித் நடித்து வருகிறார்.ஆனால் இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வெளிவராத காரணத்தினால் ரசிகர்கள் மிகவும் ஆதங்கப்பட்டு வந்தார்கள்.

அதோடு பிரதமர் மோடி,எடப்பாடி பழனிச்சாமி உட்பட பல பிரபலங்கலிடம் வலிமை அப்டேட் கொடுங்கள் என்று கேட்டு மிகவும் அட்டகாசம் செய்து வந்தார்கள்.இதனை அறிந்த போனி கபூர் மற்றும் தல அஜித் பொறுமை காக்குமாறு கூறியதால் எந்த பிரச்சனையும் செய்யாமல் இருந்து வந்தார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் வலிமை திரைப்படத்தின் உரிமையை கோபுரம் பிலிம்ஸ், ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரபூர்வமாக போனி கபூர் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தல அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு மே 1 ஆம் தேதியன்று வெளியாகும் என்று அறிவித்து உள்ளார்.

இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் வலிமை திரைப்படத்தின் திரையரங்கு உரிமை 60 கோடிக்கு விலை போகும்  என்று கூறப்படுகிறது. அதோடு 20 கோடி லாபம் பார்க்கும் வகையில் 80 கோடியாக விற்கப்படலாம் என்ற தகவலும் வைரலாகி வருகிறது.