மிரட்டலாக உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் போஸ்டர் போஸ்டர் பற்றி அஜித் என்ன கூறியுள்ளார் தெரியுமா.! இனி தான் இருக்கு சரவெடியே.!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் தல அஜித் இவர் தற்பொழுது வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.

இந்த நிலையில் சண்டை காட்சிக்காக படக்குழுவினர் வெளிநாடுகளுக்கு சென்று படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்கள்.  வலிமை திரைப்படத்தில் இருந்து எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை வெளியாகாத நிலையில் அப்டேட் எப்போது வருமென பிரபலங்களை ரசிகர்கள் கேட்டு நச்சரித்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களிடம் வலிமை அப்டேட் கேட்டு ரசிகர்கள் அடிக்கடி ட்விட்டரில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.  இப்படி அஜித்தின் வலிமை திரைப்படத்திற்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி விரைவில் வர இருக்கிறது. ஆம் வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் ரெடியாகி விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

ajith
ajith

அதுமட்டுமில்லாமல் வலிமை மோஷன் போஸ்டரை பார்த்த தல அஜித் சூப்பராக இருக்கிறது எனவும் இது ரசிகர்களின் தேவையை பூர்த்தி செய்யும் எனவும் கூறியுள்ளாராம். அதுமட்டுமில்லாமல் வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை  எப்பொழுது வெளியிட வேண்டும் என்று நான் கூறும் வரை அமைதியாக இருங்கள் என படக்குழுவினரிடம் கட்டளையிட்டுள்ளாராம்.

இதனால் நீண்டநாள்  காத்துக் கொண்டிருக்கும் தல அஜித் ரசிகர்களுக்கு மிகப் பெரிய அப்டேட் இருந்து காத்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.