வலிமை பஸ்ட் லுக் வெளியான ஐந்து நிமிடத்தில் அசர வைத்த அஜித் ரசிகர்கள்.! இதெல்லாம் அஜித் ரசிகர்களால் தான் முடியும்.!

0

தல அஜித் தமிழ் சினிமாவே கொண்டாடும் அளவிற்கு பேரும் புகழும் பெற்றுள்ளவர். இவரின் திரைப்படங்கள் சமீபகாலமாக ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்று வருகிறது அதுமட்டுமில்லாமல் வசூலிலும் நல்ல வசூல் பெற்று தமிழ் சினிமாவையே அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அதேபோல் தல அஜித்திற்கு வெறித்தனமான ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள்.

அஜித் பற்றிய எந்த செய்தி வந்தாலும் அன்று சமூகவலைதளத்தில் டிரெண்டிங்கில் கொண்டு வந்து விடுகிறார்கள். அதேபோல் அஜித் பொதுவெளியில் செல்லும் புகைப்படத்தை கூட அவர்கள் எடுத்து சமூகவளைதலத்தில் ட்ரேண்டிங்  கொண்டு வந்து விடுகிறார்கள் அஜித் தற்பொழுது வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் அப்டேட் வரும் என நீண்டகாலமாக அஜித் ரசிகர்கள் தவமாய் தவம் கிடக்கிறார்கள்.

எங்கு பார்த்தாலும் எங்கு திரும்பினாலும் வலிமை அப்டேட் கேட்டு ரசிகர்கள் நச்சரித்து வந்தார்கள் கிரிக்கெட் மைதானத்தை கூட விட்டுவைக்காமல் யூரோ கோப்பை கால்பந்து மைதானத்தில் ரசிகர்கள் அட்டகாசம் ஓயவில்லை இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் குறிசொல்லும் சாமியாரை கூட விட்டு வைக்காமல் வலிமை அப்டேட் கேட்டு சாமியாரையும் விட்டு வைக்கவில்லை.

அஜித் ரசிகர்களின் நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு வலிமை அப்டேட் வெளியானது வெளியான ஐந்து நிமிடத்திலேயே அஜித் ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் மூழ்க வைத்துள்ளார்கள். ஏனென்றால் வலிமை பர்ஸ்ட் லூக் போஸ்டர் 6 மணி அளவில் வெளியான நிலையில் அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மதுரையிலுள்ள அஜித் ரசிகர்கள் ஐந்து நிமிடத்தில் பேனர் எடுத்து பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக கொண்டாடி உள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் இருசக்கர வாகனத்தில் வலிமை பட போஸ்டரை அவரது ரசிகர்கள் பிடித்துக் கொண்டு ஊர்வலமாக செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இன்று மாலை மோஷன் போஸ்டர் வெளிவரும் என அறிவிக்கப்பட்டதிலிருந்து படத்தின் தலைப்பு மற்றும் #valimaimotionposter என்ற ஹேஸ்டேக் சமூக ஊடகங்களில்  வெளியாகி வைரலாகி வருகிறது அது மட்டும் இல்லாமல் உலக அளவில் வரை படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிக்கப்பட்டு விட்டது இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் இந்த திரைப்படம் உலகளவில் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கொண்டாடி வருகிறார்கள்.