ரசிகர்களின் செயலால் கடுப்பான வலிமை படக்குழு..!!

தல அஜித் தனக்கென மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை பெற்றிருப்பவர், அதேபோல் இவரின் திரைப்படம் திரையரங்கிற்கு வந்தாலே திரையரங்கம் திருவிழா போல் காட்சியளிக்கும், அந்த அளவு ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடுவார்கள், இந்த நிலையில் அஜீத் கடந்த வருடம் நேர்கொண்டபார்வை, விசுவாசம் ஆகிய இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

இந்த இரண்டு திரைப்படமும் வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக மீண்டும் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் அஜித் நடித்து வருகிறார், பாலிமர் திரைப்படம் ரசிகர்களுக்கு ஏற்றவாறு இருக்கும் எனத் தயாரிப்பாளர் போனி கபூர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதேபோல் ரசிகர்களுக்கு ஏற்றவாறு பைக் ஸ்டண்ட் காட்சிகளும் காதல் காட்சிகளும் படத்தில் இடம் பெற்றுள்ளன என தகவல் வெளியாகியது. அதுமட்டுமில்லாமல் அஜித் பைக் ரேஸ் காட்சியில் கலந்து கொண்ட போது தீ விபத்து ஏற்பட்டதாகவும் அந்த காயங்களுடன் பைக்ரேஸ் காட்சியை முடித்து தந்ததாகவும் கூறினார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் பைக் சேஸிங் காட்சி ஒன்றை படக்குழு எடுத்துள்ளது .ஆனால், ரசிகர்கள் தினமும் அந்த பைக் காட்சியை படம்பிடித்து நெட்டில் தட்டி விட்டு விடுகிறார்கள். இதனால் படக்குழு கடும் அப்செட்டில் இருக்கிறது. இந்த காட்சி மிகவும் பெரிய காட்சி என்பதால் செட்டில் எடுக்க முடியாது என்பதற்காக வெளியில் எடுத்துள்ளார்கள்.

ஆனால் பொது இடத்திலும் ரசிகர்கள் இப்படி வீடியோவை எடுத்து வெளியிடுவது கொஞ்சம் வருத்தமாக உள்ளது, மேலும் படத்தில் இடம் பெற்ற சாகச காட்சிகளை நெட்டில் லீக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment