டேய் தம்பி வீடியோவா எடுக்கிற அத கொஞ்சம் குடு பாப்போம்.! டெலிட் செய்துவிட்டு மொபைலை கொடுத்த அஜித்..

ajith vidaamuyarchi : நடிகர் அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்திலிருந்து ஏதாவது அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் இதுவரை எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை.

அதேபோல் இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார் அது மட்டும் இல்லாமல் பிரியா பவானி சங்கர், நடிகர் அர்ஜுன், ஆரவ், அர்ஜுன் தாஸ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள்.

நடிகர் அர்ஜுன் விஜயகாந்த் மறைவிற்கு நேரில் வந்து இரங்கல் தெரிவிக்காமல் தன்னுடைய குடும்பத்தாருடன்  புத்தாண்டை கொண்டாடிய வீடியோ இணையதளத்தில் படும் வேகமாக வைரலானது இதனை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தார்கள்.

அப்பொழுது புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒரு பெண்ணுடன் அஜித் நடனமாடும் வீடியோவும் வைரலானது இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரசிகரின் செல்போனை வாங்கி நீ வீடியோவா எடுக்கிறாய் என வீடியோவை டெலிட் செய்து பிறகு மொபைலை கொடுத்துள்ளார்.

ஆனால் அஜித் அந்த ரசிகரின் மொபைலை வாங்கி டெலிட் செய்து விட்டு மொபைலை கொடுக்கும் பொழுது மற்றொருவர் வீடியோ எடுத்து அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் அந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் படும் வேகமாக வைரல் ஆகி வருகிறது.

ரசிகர்களிடம் அன்பாக நடந்து கொள்ளும் அஜித் திடீரென இப்படி செய்ததற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும் என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் மேலும் நடிகர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் மதிப்பளிக்க வேண்டும் எனவும் ஒரு தரப்பினர் நடிகர் அஜித்குமார் செய்தது தவறு எனவும் மற்றொரு தரப்பினர் இது சரியான செயல் தான் எனவும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கு முன்பு நடிகர் சிவகுமார் செல்பி எடுக்கும் பொழுது மொபைலை தட்டிவிட்டது மிகப்பெரிய பேச்சு பொருளாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.