புதிய லுக்கில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட அஜித்.! AK62 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதோ..

0
ajith
ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 11ஆம் தேதி அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தற்பொழுது வரையிலும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

துணிவு திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பேற்றிய நிலையில் பல திரையரங்குகளில் அதிகாலை 1மணி அளவில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதனை அடுத்து ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியது. இவ்வாறு துணிவு திரைப்படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் இந்தப் படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும் ஜிப்ரான் இசையமைக்க கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார். பிறகு நடிகர் அஜித் உடன் இணைந்து மஞ்சு வாரியார், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரகனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர்-பாவனி ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தினை அடுத்து தன்னுடைய 62ஆவது படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் கைகோர்த்து இருக்கிறார்.

ajith 6
ajith 6

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாக இருப்பதாகவும் வருகின்ற பிப்ரவரி மாதம் முதல் மகாராஷ்டிரா மாநில மும்பையில் படப்பிடிப்பு துவங்கும் எனவும் படப்பிடிப்பு குழுவினர்கள் அறிவித்துள்ளார்கள். இப்படிப்பட்ட நிலையில் ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.

ajith 5
ajith 5

படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் டிஜிட்டல் உரிமம் விற்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் அஜித் சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியான நிலையில் விமான நிலையத்தில் ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த படத்தில் அஜித்குமாரின் லுக்கை பார்த்து ஆரம்பம், வீரம் படத்தில் உள்ளது போல் இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ajith 3
ajith 3