வயதான பாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்கிய அஜீத் – இணையதளத்தை கலக்கும் வீடியோ..!

ajith
ajith

சினிமாவிலும் சரி,  நிஜத்திலும் சரி ஒரே மாதிரியான பண்புகளை வைத்திருக்கும் நடிகர்கள் விரல் விட்டு என்னும் அளவிற்க்கு தான் இருக்கிறார்கள் அந்த லிஸ்டில் நடிகர் அஜித்குமார்  முதலிடத்தில் இருக்கிறார் ஏனென்றால் எப்பொழுதுமே வெளிப்படையாக பேசுவது வழக்கமாக வைத்திருக்கிறார்.

மேலும் தனது மார்க்கெட் குறைந்த பொழுதிலும் சரி, உயர்ந்த போதிலும் சரி ஒரே மாதிரியாகத்தான் நடந்து கொள்வதாக பல பிரபலங்கள் கூறுகின்றனர் இப்பொழுதும் அதே போலவே தான் இருந்து வருகிறார் தன்னை நம்பி ஒருவருக்கு உதவி செய்வது மேலும் அனைவரிடமும் ஒரே மாதிரியாக நடந்து கொள்கிறார். இதனால் ரசிகர்களையும் தாண்டி பலருக்கும் பிடித்த ஒரு நடிகராக அஜித் இருந்து வருகிறார்.

மேலும் மக்கள் மற்றும் ரசிகர்களை சந்தோஷப்படுத்த  நல்ல நல்ல படங்களை கொடுத்து வருகிறார்  அந்த வகையில் வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 61வது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் சூப்பராக நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த நிலையில்  தற்பொழுது படக்குழு டப்பிங் பணிகளை நோக்கி நகர்ந்து இருக்கிறது.

துணிவு படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு கோலாகலமாக வெளியாக இருக்கிறது.  இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜித் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது நடிகர் அஜித் எங்கு சென்றாலும் மிக எளிமையாக செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் அப்படி விமான நிலையத்தில் இருந்து இவர் வரும்பொழுது ஊனமுற்றவர்கள்  நடிகர் அஜித்தை பார்த்து உள்ளனர்.

அப்பொழுது அஜித் அங்கு சென்று அவர்களுடன் நலம் விசாரித்ததுடன் மட்டுமல்லாமல் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்துக் கொண்டார். அந்த வகையில் ஒரு வயதான ஊனமுற்ற பாட்டியிடம் சென்று நடிகர் அஜித் ஆசீர்வாதம் வாங்கியுள்ளார் அந்த வீடியோ தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய  வீடியோவை..