பலரும் அஜித்துடன் செல்ஃபி எடுத்த நிலையில் ஒரு பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தல அஜித்..!

பொதுவாக நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலரும் திரைப்படங்கள் நடிப்பது மட்டுமல்லாமல் தற்போது திரைப்படம் தயாரிப்பதிலும் இயக்குவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் அந்த வகையில் இவை எதுவும் இன்றி தன்னுடைய நேரத்தை பைக் ரேஸ் துப்பாக்கி சுடுதல் போன்ற  போட்டியில் கலந்துகொண்டு வருபவர்தான் தல அஜித்.

தல அஜித் எப்பொழுதும் வருமானத்தை நோக்கி சென்றது கிடையாது அந்த வகையில் தனக்கு பிடித்த செயல் எதுவாக இருந்தாலும் சரி அதனை சிறப்பாக செய்துகொண்டிருப்பார் அந்த வகையில் சமீபத்தில் 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு ஆறு பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்நிலையில் மாநில அளவில் வெற்றி பெற்ற தல அஜித் தற்போது தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க உள்ளாராம் இப்போட்டி மிக விரைவில் டெல்லியில் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் தற்சமயம் டெல்லிக்கு சென்று மிகத்தீவிரமாக தல அஜித் பயிற்சி எடுத்து வருகிறாராம்.

இவ்வாறு டெல்லிக்கு சென்ற பொழுது அங்கு  தாஜ்மஹாலை ரசிக்க தல அஜித் சென்றுள்ளார் அந்த வகையில் பலரும் அவரை பார்த்த உடன் செல்பி எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் இந்நிலையில் தல அஜித் ஒருவரை தேடி சென்று அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அவர் வேறு யாரும் கிடையாது தனி பெண்ணாக மோட்டார் சைக்கிளில் ஏழு கண்டங்கள் 64 நாடுகளை சுற்றி வந்த மாறல் என்ற பெண்மணியை தான் தல அஜித் நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இவர் டெல்லியில் இவர்கள் இருவரும் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டது தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

ajithkumar-1
ajithkumar-1

Leave a Comment