சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்திருப்பதாக பிரபல இயக்குனரிடம் கூறிய அஜித்.! அட்வைஸ் செய்த பிரபலம்.. அவரே புரியா தகவல்

0
ajith
ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் தற்பொழுது சினிமாவில் வளர்ந்து பல கோடி ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்தும் படங்களுக்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வரும் நிலையில் கலவை விமர்சனத்தை பெற்றாலும் கூட வசூல் ரீதியாக சாதனையைப் படைத்து வருகிறது.

இந்நிலையில் என்னதான் தற்பொழுது சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வந்தாலும் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார் நடிகர் அஜித். அப்படி நடிகர் அஜித் சினிமாவை விட்டு விலகுவதாக பிரபல இயக்குனரிடம் கூறிய நிலையில் அப்படியெல்லாம் பண்ணாதீங்க என அந்த இயக்குனர் அட்வைஸ் செய்ததாக சமீப பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது இதனை அடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் அஜித்திற்கு சினிமாவையும் தாண்டி பைக் ரேஸில் மிகவும் ஆர்வம் உடையவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். எனவே பைக் ரேஸ்சில் ஈடுபட்டு பலமுறை ஆக்சிடெண்டும் ஆகியுள்ளது. எனவே அடிக்கடி இவருக்கு முதுகு வலி வருவது வழக்கம் எனவே இவர் இயக்குனர் சுந்தர் சி இடம் சினிமாவில் இருந்து விலகப் போவதாக கூறினாராம்.

எனவே சுந்தர் சி அப்படியெல்லாம் பண்ணாதீங்க உங்களை எல்லாருக்கும் பிடிச்சிருக்கு எனக் கூறினாராம். மேலும் அப்பொழுது சில பிரச்சனைகளால் அஜித் நடிப்பிலிருந்து கொஞ்சம் விலகியே இருந்தாராம் எனவே முதுகு வலியினால் எப்பொழுது பார்த்தாலும் சினிமாவிலிருந்து விலக வேண்டும் என்ற மைண்ட் செட்டில் இருந்து வந்ததாகவும் ஆனால் அதையெல்லாம் தாண்டி தற்பொழுது அவர் பிடித்திருக்கும் இடம் ரொம்பவே அசாத்தியமான ஒன்று எனவே அஜித்தை இணைத்தால் பெருமையாக இருப்பதாக சமீப பேட்டியில் சுந்தரி சி அவர்கள் பகிர்ந்துள்ளார்.