இயக்குனருக்கே சொல்லி கொடுத்த தல அஜித்.! துணிவு மேக்கிங் வீடியோவை பார்த்து அசந்து போன ரசிகர்கள்…

0
thunivu
thunivu

இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளிவந்த துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து இதுவரைக்கும் வசூலில் 200 கோடிக்கு மேல் வசூலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் துணிவு திரைப்படத்தில் அஜித் உடன் இணைந்து மஞ்சுவாரியர், சிபி சக்கரவர்த்தி, அமீர், பாவனி, சமுத்திரகனி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் ஒரு ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள துணிவு திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த படத்தில் நடிகர் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்ற தகவல் வெளியானதில் இருந்து துணிவு திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது அந்த வகையில் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உருவாகி உள்ளது இந்த திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான வரவேற்பை பெற்று வருகிறது.

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் அஜித். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏகே 62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கிறார் மேலும் இந்த படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரைக்கும் காதல் ரொமான்டிக் படங்களை கொடுத்து வந்த விக்னேஷ் சிவன் முதன் முறையாக ஒரு கேங்ஸ்டர் படத்தை அஜித்திற்காக இயக்க இருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் இந்த கதைக்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் மிக அதிகமாக மெனக்கட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் துணிவு திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அதில் துணிவு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அந்த பேங்க் காட்சிகளை எப்படி படமாக்கப்பட்டது என்ற மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.

இந்த வீடியோவில் நடிகர் அஜித் இயக்குனர் எச் வினோத்திற்கு எப்படி துப்பாக்கி பிடிப்பது எப்படி சுடுவது என்று சொல்லிக் கொடுப்பது போல ஒரு காட்சி இருக்கிறது இதை பார்த்த பலரும் இயக்குனருக்கே சொல்லிக் கொடுக்கும் தல என்று கூறி வருகிறார்கள் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த வீடியோ…