மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித் என்னிடம் சொன்னது.? ஊற காப்பத்துறதுல்லாம் போதும் – இப்படி ஒரு படம் பன்னனும்னு என்கிட்ட சொன்னாரு.! வெங்கட் பிரபு அதிரடி.

0

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் அஜித் அடுத்தடுத்த படத்தையும் சிறந்த இயக்குனர்களுக்கு கொடுத்து வருவதால் தற்போது அஜித்தின் மார்க்கெட் வேற லெவல் உயர்ந்து உள்ளது.

வலிமை படம் பல வருடங்களாக எடுக்கப்பட்டு வந்தாலும் இந்த திரைப்படம் வெளிவந்து தமிழ்நாட்டு சினிமாவையே ஒரு திருப்பி போடும் என படத்தைப் பற்றி அறிந்தவர்கள் பலரும் கூறுகின்றனர் மேலும் அஜித் கேரியரில் இது ஒரு பெஸ்டான படமாகவும் அமையும் எனவும் கூறப்படுகிறது.

இதனால் தல ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றனர். மேலும் ரசிகர்கள் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் தேதியையும் கொண்டாட தற்போது உற்சாகத்தில் இருக்கின்றனர். இது இப்படியிருக்க இயக்குனர் வெங்கட் பிரபு இணையதளத்தின் மூலம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார்.

அதில் பல சுவாரஸ்யமான விஷயங்களை கலந்து கொண்டார்.  அதில் ஒன்றாக அஜித்தை பற்றியும் அவர் குறிப்பிட்டு பேசினார் அவர் கூறியது மங்காத்தா திரைப்படம் எதிர்பாராத ஒன்றாக அமைந்து ஆனால் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. அதற்கு நான் கடவுளிடம் தான் நன்றி சொல்ல வேண்டும்.

அஜித் எனக்கு மங்காத்தா படத்திற்கு முன்பே தெரியும் அப்போது எங்களுடன் அழகாக பழகுவார் மேலும் எனது வீட்டுக்கு வந்து சாதாரணமாக பழகுவார். அப்படிப் பேசிக்கொண்டு இருக்கும் போது தான் மங்காத்தா திரைப்படம் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது ஒரு வழியாக அந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து விட்டது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்க பலரும் கூறினார்கள் ஆனால் அதற்குள் எனக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளில் நான் கமிட் ஆனதால் என்னால் படங்கள் பண்ண முடியாத சூழல் ஏற்பட்டது மேலும் நானும் பலதடவை இது குறித்து பல விஷயங்கள் குறித்தும் பேசி உள்ளன்.

ஆனால் அஜித்தோ ஊரை காப்பாற்ற படங்கள் எல்லாம் போதும் ஒரு ஜாலியான fun – ன்னா இருக்கும் படத்தை எடுக்க வேண்டும் என என்னிடம் பலமுறை கூறியதாக வெங்கட்பிரபு சொன்னார். இச்செய்தி தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.