புதிய படத்தில் நடிக்கும் அஜித்.? ரசிகர்களை சந்தோஷப்படுத்த படக்குழுவை சாறு புழிய ரெடி ஆகுகிறாரா தல.? வைரல் நியூஸ் இதோ.

0

குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான படங்களை தரும் இயக்குனர்களை டாப் நடிகர்கள் சமீபகாலமாக தேர்வு செய்து பட வாய்ப்புகளை கொடுக்கின்றனர் அந்த வகையில் சதுரங்க வேட்டை படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஹச். வினோத்.

இந்த படத்தை தொடர்ந்து பல்வேறு சிறப்புக்குரிய திரைப் படங்களை கொடுத்தவர் அதிலும் சதுரங்க வேட்டை அடுத்தபடியாக தீரன் அதிகாரம் ஒன்று படம் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தது. அதன்பிறகு முன்னணி நடிகர்கள் பலரும் வினோத் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

அந்த வகையில் கார்த்தியை தொடர்ந்து அஜித்  இரண்டாவது முறையாக ஹச். வினோத்துடன் இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் நடிக்கிறார் இதற்கு முன்பாக நேர்கொண்டபார்வை என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார் என்பது குறிப்பிடதக்கது.

ஹச். வினோத் அஜித்தின் வலிமை படம் இரண்டு வருடங்களுக்கு மேலாக எடுத்து வந்தாலும் இதுவரை முடிந்த பாடு இல்லாமல் இருக்கிறது. இந்த நிலையில் அடுத்த படம் குறித்து ஒரு புதிய  தகவல் தற்பொழுது வெளியே கசிந்துள்ளது அதாவது வலிமை திரைப்படத்தை முழுவதுமாக முடித்தவுடன் அஜித் உடனடியாக அடுத்த படத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அந்த படத்தை வெறும் இரண்டே மாதங்களில் எடுக்க முடிக்க அஜித்தும் படக்குழுவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை வினோத் இயக்க அஜித் நடிக்க உள்ளார். இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க உள்ளார்.