தமிழ் சினிமா உலகில் இரு தூண்கள் ஆக பார்க்கப்படுவது அஜித் மற்றும் விஜய் இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் படங்களின் மூலம் மோதிக் கொண்டாலும் கடந்த சில வருடங்களாக சோலோவாக தனது படங்களை ரிலீஸ் செய்து வந்தனர் திடீரென எதிர்பாராத விதமாக வருகின்ற பொங்கலை முன்னிட்டு..
அஜித்தின் துணிவு விஜயின் வாரிசு படங்கள் மோதுகின்றன இதை மிகப்பெரிய ஒரு விருந்தாக ரசிகர்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர். படம் வெளிவர இன்னும் விரல் விட்டு என்னும் நாட்களே இருப்பதால் இரண்டு படகுழுவும் தொடர்ந்து பிரமோஷன் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது மறுபக்கம் அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது.
அஜித்தின் துணிவு அண்மையில் வெளிவந்து 50 மில்லியன் பார்வையாளர்களை கண்டு அசத்தியது இதை பார்த்த அனைவரும் செம சூப்பராக இருப்பதாக கூறினர். ஒரு பக்கம் விஜயின் வாரிசு பட ட்ரைலர் அண்மையில் வெளிவந்தது ட்ரெய்லரை பார்க்கும்பொழுது தெரிந்துவிட்டது.
இது ஒரு குடும்ப சென்டிமென்ட் படம் என்று இந்த ட்ரெய்லரும் நல்ல வரவேற்பை பெற்றுக் போய்க் கொண்டிருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் துணிவு அமெரிக்காவில் விஜய் படத்தை விட அதிக திரையரங்குகளில் வெளியாக உள்ளதாம் அதோடு மட்டுமல்லாமல் மலேசியா சிங்கப்பூர் அரபு நாடுகளில் துணிவு படத்தின் முன்பதிவு தான் அதிகமாக விற்று இருப்பதாக கூறப்படுகிறது.
ட்ரெய்லர் வெளிவந்த பிறகு இந்த படத்தை பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன நிச்சயம் அதை துணிவு திரைப்படம் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல்களை தற்போது அஜித் ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு பரப்பியும் வருகின்றனர்.