அஜித் : “தல” என்ற பெயரை கூப்பிட வேண்டாம் என சொல்ல காரணம் இதுதான் – வெளிவந்த விளக்கம்.

ajith
ajith

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வரும் அஜித். சினிமாவை தாண்டி தனது ஆசைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக பூர்த்தி செய்து வருகிறார். இதனால் அஜித்தை பலபேருக்கு படிப்பதோடு மட்டுமல்லாமல் ரோல் மாடலாக இளம் தலைமுறை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

அஜித் சினிமாவையும் தாண்டி ட்ரோன் இயக்குதல், கார் பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற வற்றில் தனது திறமையை வெளிக்காட்டி உள்ளார் அதைத் தொடர்ந்து தற்போது உலக அளவில் பைக்கில் பயணம் செய்ய அதிகம் முயற்சித்து வருகிறார்.

அண்மையில் கூட வலிமை திரைப் படத்தை முடித்துவிட்டு இந்தியா வைத்து சுற்றி பார்த்து வந்தார் அதன் புகைப்படங்கள் கூட தீயாய் பரவின. மேலும் உலக அளவில் பைக் ரேட் செய்ய தற்போது பலரிடம் ஆலோசனை கேட்டு வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் திடீரென ஒரு புதிய அறிக்கை வெளியிட்டு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளார்.

அதில் அவர் கூறியது : அஜித், அஜித் குமார் ஏகே என அழைத்தால் மட்டும் போதும் என அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார். இவ்வாறு அவர் கூறியது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது அதுவும் ஏன் இருபது வருடங்கள் கழித்து இவ்வாறு சொன்னார் என்பது பலருக்கும் புரியாமல் இருந்தது அதற்கு தற்போது தெளிவான விளக்கமும் கிடைத்துள்ளது.

அதாவது தன் தாய், தந்தையர் வைத்த அஜித் என்ற பெயரை கூப்பிட்டவே அஜித் விரும்புவதாகவும் அதன் காரணமாக இனி யாரும் தல, அல்டிமேட் ஸ்டார், காதல் மன்னன் என எந்த பெயர் வைத்து அழைக்க வேண்டாம் எனவும் அஜித் முடிவு செய்துள்ளதாக அவருடைய பிஆர்ஓ கூறி உள்ளார்.