தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். சமீபகாலமாக அஜித்குமார் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அதிரி புதிரி ஹிட் அடிக்கின்றன அந்த திரைப்படங்கள் அனைத்துமே வித்தியாசமாக இருப்பதை காரணம் என கூறப்படுகிறது அந்த வகையில் விஸ்வாசம், நேர்கொண்டபார்வை திரைப்படத்தை தொடர்ந்து இப்போது கூட அஜித்தின் வலிமை திரைப்படம்.
வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு வலிமை திரைப்படம் ரொம்ப ரொம்ப பிடித்து போய் உள்ளது காரணம் வலிமை படம் சென்டிமென்ட் காட்சிகள் பெண் பலரையும் அழவைத்து இருப்பதாக கூறப்படுகிறது அதனால் 20 நாட்களை கடந்த பிறகும் வலிமை திரைப் படத்திற்கான வரவேற்பு குறையாமல்..
இருந்து வருவதாக திரையரங்க உரிமையாளர்கள் பலர் கூறிவருகின்றனர் வலிமை திரைப்படம் இதுவரை 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகர் அஜித்குமார் மீண்டும் இயக்குனர் வினோத் உடன் இணைந்து தனது 61 வது படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது .
இந்த படத்தின் ஷூட்டிங் வெகு விரைவிலேயே தொடங்கப்பட இருக்கிறது. அஜித்தின் 61 வது திரைப்படத்தின் ஷூட்டிங் கூட ஆரம்பிக்கப்படவில்லை அதற்குள் அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் அஜித்தின் 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும் லைக்கா நிறுவனம் மிகப் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அழகான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் பாகிஸ்தான் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் ஒரு புதிய பதிவை போட்டுள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது : விக்கி பெரிய இடத்தை அடைந்து இருக்கிறாய். அஜித் – நயன்தாரா ஐந்தாவது முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார்கள் அதை காண ஆர்வமாக இருக்கிறது என கூறியுள்ளார்.
https://twitter.com/AownMShah/status/1504050416732237828?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1504050416732237828%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fpakistan-reporter-about-ajith-upcoming-movie-1647437145