சினிமா உலகைப் பொருத்தவரை முன்னணி நடிகையாக இருந்தாலும் சரி இளம் நடிகையாக இருந்தாலும் சரி தொடர்ந்து வெற்றி கனியை பறிக்க முடியாது என்பதுதான் உண்மை ஏனென்றால் அவரது படங்களும் தோல்வியை தழுவும். இதனால் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லாமல் அல்லாடுவார்கள். இந்த நேரத்தில் இயக்குனர்கள் அல்லது நடிகர்கள் உதவி செய்தால் மட்டுமே அந்த நடிகைகள் பட வாய்ப்பை கைப்பற்றி..
அடுத்த அடுத்த வெற்றியை காண முடியும் அப்படி தமிழ் சினிமா உலகில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் திரிஷா. சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாலும்.. பட வாய்ப்பு அவருக்கு இல்லாத நேரத்தில் சில நடிகர்கள் நடிகை திரிஷாவுக்கு வாய்ப்பு அசத்துவார்கள்.
அந்த வகையில் நடிகர் அஜித்குமார் நடிகை திரிஷாவுக்கு பல பட வாய்ப்புகளை கொடுத்திருக்கிறார் என்பது தான் உண்மை நயன்தாராவுக்கு கூட இப்படி சிபாரிசு செய்தது கிடையாது. சொல்லப்போனால் அஜித் யாருக்கும் அவ்வளவாக சிபாரிசு செய்ய மாட்டார் ஆனால் திரிஷாவுக்கு பல படங்களில் நடிக்க வைக்க சிபாரிசு செய்து உள்ளார். அஜீத்தும், திரிஷாவும் முதன் முதலில் இணைந்து நடித்த திரைப்படம் “ஜி” இத்திரைப்படம் தோல்வியை தழுவியதை உணர்ந்து கொண்ட அஜித் மீண்டும் திரிஷாவுக்கு வாய்ப்பு கொடுத்தார்.
அதுக்கு காரணமும் நடிகை த்ரிஷா தொடர் தோல்வி படங்களை கொடுத்தால் திரிஷாவுக்கு ராசியில்லாத நடிகை என கூறி விடுவார்கள் என நினைத்து அவருக்கு அடுத்த வாய்ப்பை கொடுத்த அந்த வகையில் கிரீடம் திரை படத்தில் ஹீரோயினாக திரிஷாவை நடிக்க வைக்க சிபாரிசு செய்துள்ளார் அதன்படியே கிரீடம் திரைப்படத்தில் நடித்து அசத்தினார்.

அதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மங்காத்தா திரைபடத்தில் நடிக்க வைக்க திரிஷாவை சிபாரிசு செய்தார் அதேபோன்றுதான் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான என்னை அறிந்தால் திரைப்படத்திலும் திரிஷாவுக்கு சிபாரிசு செய்து கொடுத்தாராம் இப்படி திரிஷாவுடன் தொடர்ந்து நான்கு திரைப்படங்கள் நடித்துள்ளார் அஜித். படங்களிலும் இயக்குனர்களுக்கு திரிஷாவை சிபாரிசு செய்தாராம்.