வினோத் இயக்கத்தில் அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தல60 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார், இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிதான், இந்த திரைப்படத்தையும் நேர்கொண்டபார்வை திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூர் தான் தயாரிக்க இருக்கிறார்.
வினோத் இயக்கிய நேர்கொண்டபார்வை திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது இது அனைவருக்கும் தெரிந்ததுதான், தற்பொழுது நடிக்க இருக்கும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை தற்காலிகமாக தல 60 என வைத்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் அதனால் இரவு பகலாக ஜிம் ஒர்க்கவுட் செய்து தனது உடலை ஃபிட்டாக மாற்றுகிறார். அதன் புகைப்படங்கள் சமீபத்தில்கூட இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படத்தில் அஜித் மீண்டும் சிக்ஸ்பேக் வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் படத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு அஜித் சிறிய முறுக்கு மீசையுடன் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது, தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் கார்த்திக் வைத்திருந்த முறுக்கு மீசை போல அஜித் வைத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. இதற்காக தான் அஜித் மீசையை ட்ரிம் செய்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் படத்தில் அஜித் பெரும்பாலும் போலீஸ் உடை அணிய மாட்டார் எனவும் சில காட்சிகளில் மட்டுமே போலீஸ் உடை அணிந்து இருப்பார் என்றும் பல காட்சிகளில் காக்கி உடை மற்றும் வெள்ளை நிற டி ஷர்ட் அணிந்து இருப்பார் என்றும் கூறப்படுகிறது. படத்தில் சில பைக் சேசிங் காட்சிகளும் இருக்குமென கூறுகிறார்கள்.
