BMW பைக்கை தொடர்ந்து சொகுசு காருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட அஜித் – அதன் விலை மட்டுமே இத்தனை கோடியா.? வாய் விளக்கும் ரசிகர்கள்.

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார் இவர் வலிமை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் போனி கபூர் தயாரிக்கிறார்.

ஹச். வினோத் இந்தப் படத்தை முழுக்க முழுக்க ஒரு வித்தியாசமான முறையில் எடுத்து வருகிறார் இந்தப் படத்தில் அஜித் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது அதற்காக அஜித்தும் சுமார் 20 கிலோ உடல் எடையை குறைத்து ஒரு புதிய கெட்டப்பில்  நடிக்கிறார். இவருடன் இணைந்து மஞ்சுவரியர், வீரா, சமுத்திரகனி மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் 41 ஒ நாள் இரவு / பகல் பார்க்காமல் எடுக்கப்பட்ட வந்ததாக கூறப்படுகிறது இதுவரை 80% படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக அஜித்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து விட்டதாகவும் இன்னும் கொஞ்சம் காட்சிகள் மட்டுமே அஜித்தை வைத்து எடுக்க வேண்டியது உள்ளதாம்.

இரண்டாவது கட்ட ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பாக நடிகர் அஜித்குமார் ஐரோப்பிய நாடுகள் பக்கம் பைக்கில் வலம் வந்து கொண்டிருக்கிறார் அதன் புகைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்து அசத்தினார் மேலும் கப்பலில் இவர் பயணித்த புகைப்படங்களும் வேற லெவலில் ட்ரெண்ட் ஆகியது.

இதனை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் விலை உயர்ந்த சொகுசு கார் அருகில் நின்று நடிகர் அஜித்குமார் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த காரின் இந்திய மதிப்பு படி பார்த்தால் சுமார் 13 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது. அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகின்றன.

ajith
ajith
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment