ஊரடங்கு நேரத்திலும் வலிமை திரைப்படத்திற்காக ரிஸ்க் எடுக்கும் தல அஜித்!!. லீக் ஆன ரகசியம்.

தல அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தயாரித்த போனிகபூர் தான் தயாரித்து வருகிறார்.

தற்பொழுது ஊரடங்கு காரணமாக படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இது அஜித்திற்கு சாதகமாக அமைந்துள்ளது ஏனென்றால் அஜித் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது, அதற்காக தல அஜித் தன்னுடைய உடலை கட்டுமஸ்தாக மாற்றி வருகிறாராம்.

ஏற்கனவே விவேகம் திரைப்படத்தில் அஜித் தனது உடல் எடையை குறைத்து கட்டுமஸ்தான உடல் அமைப்புடன் படத்தில் வலம் வந்தார் அதுமட்டுமில்லாமல் இரண்டாம் பாதியில் சிக்ஸ்பேக் வைத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஆனால் வலிமை திரைப்படத்தில் அதைவிட இரண்டு மடங்கு தனது உடலை கட்டுக்கோப்புடன் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக தல அஜித் வீட்டிலேயே கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறாராம், உடற்பயிற்சிக்காக பேர்சனல் டிரெய்னர் ஒருவரை அப்பாயின்மென்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது, அஜித்திற்கு ஏற்கனவே விபத்து நடந்து முதுகில் ஆபரேஷன் செய்துள்ளது அனைவருக்கும் தெரிந்ததுதான் ஆனால் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தல அஜித் படத்திற்காகவும் ரசிகர்களுக்காகவும் இப்படி வெறித்தனமாக உடல் எடையை குறைத்து வருவது அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் புலி திரைப்படம் வெற்றித் திரைப்படமாக அமையவேண்டும் என்பதற்காக சிக்ஸ்பேக் வைத்து நடிக்கவிருக்கிறாராம்.

அஜித் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்து வருவதால் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்படி வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Comment