சவுண்ட வச்சு எந்த காருன்னு ஈசியா கண்டுபிடிச்சிடுவாரு.. ஸ்ரீகாந்த் தேவாவை ஆச்சரியப்படுத்திய அஜித்!

Ajith : நடிகர் அஜித்குமார் தனது படங்களில் சமூக அக்கறையுள்ள மெசேஜ்களை திணித்து நடித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறார் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு படத்தை தொடர்ந்து விடாமுயற்சி படத்திலும் சமூக அக்கறையுள்ள மெசேஜ்  இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் சூட்டிங் இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என தெரியப்படுகிறது. படப்பிடிப்பு அனைத்துமே துபாய் மற்றும் அபுதாபியில் தான் நடக்க இருக்கிறதாம். செப்டம்பர் மாதம் சூட்டிங் ஆரம்பித்து அடுத்த வருடம் ஜனவரியில் முடியும் என தெரிய வருகிறது. அடுத்த வருடம் கோடை விடுமுறை நாட்களில் தான் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா நடிக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது மேலும் சஞ்சய் தத், அர்ஜுன், அர்ஜுன் தாஸ் போன்றவர்கள் நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்து வருகிறது இந்த நிலையில் அஜித் பற்றி பிரபல பாடகர் ஸ்ரீகாந்த் தேவா பேசியுள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..

உன்னை பிடிக்கும் உன்னை பிடிக்கும் பாடலை நாங்கள் ரெடி செய்தோம் அப்பொழுது அந்த பாடலில் வேகமாக ஓடும் ஒரு காரின் சவுண்டையும் அதில் திணித்திருந்தோம். பிறகு அஜித் சாரை கூப்பிட்டு  பாடலைப் போட்டு காட்டினோம் பாடல் அவருக்கு ரொம்ப பிடித்தது பாடல் ஓடிக் கொண்டிருக்கும் போது அந்த ஒரு காரின் சவுண்டும் இடம் பெற்று இருக்கும் அதை நோட் பண்ணி அஜித்..

Ferrari Car
Ferrari Car

உடனே  ஸ்ரீகாந்த் தேவாவை அழைத்து இது ஃபெராரி ஜி.டி காரின் சவுண்ட் என கூறினார் இதை கேட்ட அவர் எப்படி சார் ஒரு சவுண்டை வைத்து கண்டுபிடித்தீர்கள் அந்த சவுண்டு எனக்கு தெரியும் எனக்கு கூறினார். ரேஸ் பற்றி தெரியும் என கூறியுள்ளார் அதுமட்டுமில்ல எந்த பைக் சவுண்டாக இருந்தாலும் அதை ஈசியாக கண்டுபிடித்து வாழ்கிறார் எனவும் கூறினார்.