நடிக்க மறுத்த அஜித் மற்றும் சூர்யா.! பின்பு இளம் நடிகர் நடித்து மெஹா ஹிட்டான திரைப்படம். என்ன படம் தெரியுமா?

லிங்குசாமி இயக்கத்தில் 2001ஆம் ஆண்டு தமிழில் வெளியாகிய திரைப்படம் ஆனந்தம் இந்த திரைப்படத்தை ஆர்பி சவுத்ரி தயாரித்திருந்தார். படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. மேலும் இந்த திரைப்படத்தில் மம்முட்டி, முரளி அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா, டெல்லி கணேஷ், மற்றும் ஸ்ரீவித்யா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தார்கள்.

படத்தை 2001 ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி வெளியிட்டார்கள் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கூட்டு குடும்பத்தை சேர்ந்த கதையாகும். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர் அஜித் மற்றும் சூர்யா. இவர்கள் இருவருக்குமே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதே போல் இவர்களின் படம் திரைக்கு வருகிறது என்றால் திரையரங்கு திருவிழா போல் காட்சியளிக்கும்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் நடிக்க மறுத்த கதையில் இளம் நடிகர் நடித்து மெகா ஹிட்டான திரைப்படத்தை பற்றி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆம் ஆனந்தம் திரைப்படம் இன்னும் ரசிகர்களிடம் பிரபலமாக பேசப்படும் திரைப்படமாகும். அதுமட்டுமில்லாமல் இன்றும் அனைவராலும் ரசித்து பார்க்கக்கூடிய திரைப்படம் ஆனந்தம்.

இந்த திரைப்படத்தில் தான் அப்பாஸ் கதாபாத்திரத்திற்கு முதன்முதலில் தல அஜித்திடம் பேசப்பட்டது. ஆனால் அந்த காலகட்டத்தில் அஜித் காதல் மன்னனாக வலம் வந்ததால் இந்த திரைப்படத்தில் நடிக்க மறுத்துள்ளார் அதன்பிறகு இந்த வாய்ப்பு சூர்யாவை சென்றடைந்தது சூர்யாவோ மூன்றாம் கட்ட கதாநாயகனாக நடிப்பதற்கு எனக்கு உடன்பாடு இல்லை என கூறி மறுத்துவிட்டார்.

அதன் பின்புதான் அந்த கதாபாத்திரத்தில் அப்பாஸ் நடித்தார் இந்த திரைப்படத்தின் மூலம் அப்பாஸ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார். அதுமட்டுமில்லாமல் படம் வெளியான பிறகு அப்பாஸ் கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனந்தம் திரைப்படத்தில் அப்பாஸ்க்கு  ஜோடியாக சினேகா நடித்து இருந்தார். தமிழ் சினிமாவுக்கு நடிகை சினேகா அறிமுகமானது ஆனந்தம் திரைப்படத்தில் தான்.

Leave a Comment