அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகவும் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நடிகராகவும் வலம் வருகிறார். இந்தநிலையில் அஜித், போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில் அஜீத் மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தில் அஜித் வில்லன் கதாபாத்திரத்திலும் ஹீரோ கதாபாத்திரத்திலும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. இந்த நிலையில் அஜித் நடிக்கும் 62வது திரைப்படத்தின் எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்களிடமும் அதிகரித்துள்ளது.
அதேபோல் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் இவர்களிருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள். அதேபோல் அஜித் மற்றும் சூர்யா இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆவதை பார்த்துள்ளோம்.
இந்த நிலையில் இன்று அஜித்தின் பிறந்த நாளைக்கு வாழ்த்து கூறும் வகையில் சூர்யாவின் ரசிகர்கள் பலரும் அஜித்துடன் சூர்யா இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்து பிறந்தநாள் வாழ்த்து கூறிவருகிறார்கள் சூர்யா ரசிகர்கள்.
அந்த புகைப்படத்தில் அஜித் மற்றும் சூர்யா இருவரும் இணைந்து சைக்கிள் ரைட் சென்றுள்ளார்கள் இந்த புகைப்படம் தான் தற்போது இணையதளத்தில் படு வேகமாக ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படம்.