அஜித்துடன் ஒத்தைக்கு ஒத்தையாக மல்லுக்கட்ட போகும் சூர்யா.! அதிகாரபூர்வ அறிவிப்பு.! அப்போ இந்த தீபாவளிக்கு சரவெடி தான்.

நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தை போனி கபூர் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இந்த நிலையில் வலிமை திரைப்படம் ஆக்ஷன் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ajith-valimai
ajith-valimai

இது நிலையில் வலிமை திரைபடம் ரசிகர்களுக்கு ஏற்றவாறு பைக் ரேஸ் காட்சிகளும் கார் ரேஸ் காட்சிகள் இடம் பெறும் என தயாரிப்பாளர் ஏற்கனவே கூறியிருந்தார், அதேபோல் அஜித் வலிமை திரைப்படத்தில் பைக்ரேஸ் காட்சியை நடித்து முடித்து விட்டார். இந்நிலையில் படத்தை வருகிற தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது இது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

ஆனால் தற்பொழுது சூர்யாவின் ‘அருவா’ திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக தற்பொழுது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படத்தை விரைவில் படக்குழு வெளியிட இருக்கிறது இந்த நிலையில் சூரிய அடுத்ததாக தனது 39வது திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

இந்த திரைப்படத்தை ஹரி தான் இயக்குகிறார், படத்திற்கு டைட்டிலாக ‘அருவா’ என வைக்கப்பட்டுள்ளது, இதற்கு முன் சூர்யா ஹரி இணைந்து ஆறு, வேல், சிங்கம் 1, சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார், தற்பொழுது இவர்கள் இணையும் ஆறாவது திரைப்படம் தான் அருவா.

suriya 39
suriya 39

இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைக்க இருக்கிறார், டி இமான் ஹரி மட்டும் சூர்யாவுடன் இணையும் முதல் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தின்  படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்கி ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

அதேபோல் வலிமை திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீஸாகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான், இந்த நிலையில் அஜீத், சூர்யா இருவரும் தீபாவளி ரேஸில் கலந்து கொள்வதால் ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம் தான்.

Leave a Comment