யுவன் சங்கர் ராஜாவிற்கு உறுதுணையாக இருந்த அஜித்.. ஆரம்ப புள்ளியே இவர் தான்..

Yuvan Shankar Raja: இன்று யுவன் சங்கர் ராஜா பிறந்த நாளை முன்னிட்டு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் அவரை வாழ்த்து மழையில் நினைத்து வருகின்றனர். மேலும் இவர் குறித்த தகவல்களும் சோசியல் மீடியாவில் வைரலாக யுவன் சங்கர் ராஜாவிற்கு அஜித் செய்த உதவி பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் யுவன் சங்கர் ராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் இவருக்கு ரசிகர்களும் திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா தனது 16 வயதில் அரவிந்தன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக சினிமாவிற்கு அறிமுகமானார்.

இந்த படம் சொல்லும் அளவிற்கு ஓடாத காரணத்தினால் இதனை தொடர்ந்து சில திரைப்படங்கள் இருக்கு இசையமைத்திருந்தார். அப்படி இவர் இசையமைத்திருந்த பாடல்கள் நன்றாக இருந்தாலும் சொல்லும் அளவிற்கு படங்கள் ஹிட்டடிக்க வில்லை எனவே சரியாக இவருக்கு வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இந்த சமயத்தில்தான் அஜித் நடிப்பில் வெளியான தீனா திரைப்படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு யுவன் சங்கர் ராஜாவிற்கு கிடைத்துள்ளது.

இந்த படமே இவருடைய திரை வாழ்க்கைக்கு திருப்பு முறையாக அமைந்துள்ளது. எனவே இவ்வாறு யுவன் சங்கர் ராஜாவின் வாழ்க்கையை மாற்றிய தீனா படத்திற்கு எப்படி இசையமைப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்து பார்க்கலாம். பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.

அதன் பிறகு தான் சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை இந்த நேரத்தில் அஜித் யுவன் சங்கர் ராஜாவை அழைத்து பேசியுள்ளார். உங்கள் இசையில் வெளியான பாடல்களை நான் கேட்டிருக்கிறேன் சிறப்பாக இருந்தது என் படத்திற்கும் இசையமைக்க முடியுமா என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதை எதிர்பார்க்காத யுவன் சங்கர் ராஜா ஆச்சரியப்பட்டுள்ளார்.

அப்பொழுது எனக்கு உங்கள் மீது அதிக நம்பிக்கை உள்ளது கண்டிப்பாக உங்களால் சிறப்பாக பண்ண முடியும் நான் உறுதுணையாக இருக்கிறேன் என அஜித் யுவன் சங்கர் ராஜாவிற்கு நம்பிக்கை கொடுத்துள்ளார். அதன் பிறகு தான் தீனா படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார் இந்த படமும் சூப்பர் ஹிட் பெற யுவன் சங்கர் ராஜா இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். இவ்வாறு இது குறித்து யுவன் சங்கர் ராஜா பல பேட்டிகளில் கூறியுள்ளார்.