பார்க்கத்தான் அஜித் சிம்பிளா தெரிவாரு.? அவரிடம் எல்லா குணமும் அதிகமாக தான் இருக்கும்.? அஜித் பற்றி தகவலை புட்டு புட்டு வைக்கும் பிரபல இயக்குனர்.

திரை உலகை பொறுத்தவரை குறைந்த சம்பளம் வாங்கும் பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து தனது திறமையை வளர்த்துக்கொண்டு எல்லாத் துறைகளிலும் தனது திறமையைக் காட்டுவார்கள் அந்த வகையில் இயக்குனர்கள் தற்போது படங்கள் இயக்குவதையும் தாண்டி நடிக்கவும் தொடங்கி உள்ளனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது வெற்றியை நோக்கி ஓடி கொண்டிருப்பவர் தான் இயக்குனர் ராஜகுமாரன்.

இவர் நீ வருவாய் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அடி எடுத்து வைத்தார் அதன் பின் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் அந்த படங்கள் ஒவ்வொன்றும் வெற்றியை பெற்று தந்தாலும் ஒருகட்டத்தில் இயக்குனர் என்ற அந்தஸ்தையும் தாண்டி பல கதாபாத்திரங்களில் நடித்தும் உள்ளார்.

சமீபத்தில் கூட இவர் “கடுகு” என்ற திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குறித்து பல்வேறு விதமான கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கும் பதிலளித்தார். முதலில் அஜித்தை பற்றி கூறுங்கள் : என கேட்டதற்கு அஜித் ஒரு சிறந்த மனிதர் எனவும் மேலும் எப்போதும் ஜாலியாக இருக்க கூடியவர் என கூறினார்.

அதேசமயம் பிடிவாத குணமும் அவருக்கு அதிகம் ஒருமுறை ஒரு படத்தின் காட்சியில் அஜித்குமார் கோட் ஷர்ட்க்கு டை கட்டுவது போல் படத்தில் காட்சிகள் எடுக்கப்பட்டது அப்போது இயக்குனர் அந்த காட்சியை பலமுறை எடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அஜித்திடம் போய் டை கட்ட தெரியுமா என கேள்வி எழுப்பி உள்ளார்.

அஜித் கோபப்படாமல் ஆறு, ஏழு முறை கட்டியுள்ளார். அவர் அவ்வாறு செய்வதற்கு அப்பொழுது காரணம் புரியவில்லை பின்பு தான் புரிந்தது அதாவது அவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக மெடிக்கல் மற்றும் பல கம்பெனிகளில் வேலை செய்துள்ளார் அங்கு செல்லும்போது எப்படியும் டைகட்டி தான் பணியாற்ற வேண்டும். அதை இயக்குனருக்கு உணர்த்தவே ஆறு, ஏழு டேக்குகள் எடுத்து நடித்தாராம்.

rajakumaran
rajakumaran

மேலும் ஒன்மோர் டேக் எடுத்தால் அஜித்துக்கு சுத்தமாக பிடிக்காது காரணம் எத்தனை முறை எடுத்தாலும் ஒரே மாதிரியான நடிப்பை தான் வெளிப்படுத்த போகிறோம் அப்படி இருக்கும் போது எதற்கு இத்தனை முறைடேக் எடுக்கிறார்கள் என்பதை மறைமுகமாக அவர் நடிப்பில் காட்டுவார். அஜித் இடத்தில் எல்லாவிதமான குணமும் நீங்கள் பார்க்க முடியும் அதனாலதான் அவர் அல்டிமேட் ஸ்டாராக தமிழ் சினிமாவில் ஜொலிப்பதாக அவர் தெரிவித்தார்.

Leave a Comment