என்னடா சொல்றீங்க.. ஷங்கரின் இத்தனை திரைப்படங்களில் முதலில் நடிக்க வேண்டியது அஜித்தா.? முக்கிய பிரபலம் சொன்னா தகவலால் அதிர்ச்சியான ரசிகர்கள்

பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தை வைத்திருக்கும் ஷங்கர் தமிழ் சினிமாவில் உள்ள  விஜய், விக்ரம், ரஜினி, கமல் போன்ற பல டாப் நடிகர்களை வைத்து பிரம்மாண்ட படங்களை கொடுத்தார். இவர் இயக்கிய எந்திரன், முதல்வன், சிவாஜி, இந்தியன் 2.0 போன்ற பல படங்களும் ரசிகர்களுக்கு பேவரைட் படங்களாகவும் அதிக வசூலை அள்ளிய படங்களாகவும் இருந்து உள்ளன.

தற்போது இயக்குனர் ஷங்கர் தெலுங்கு டாப் ஹீரோ ராம்சரனை வைத்து ஆர் சி 15 என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் தமிழில் இந்தியன் 2 படத்தையும் இயக்கி வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் டாப் நடிகராக இருக்கும் அஜித் உடன் மட்டும் இதுவரை சேர்ந்து படம் பண்ணியதே இல்லை..

இருவருக்கும் ஏதாவது பிரச்சனையா அல்லது சூழ்நிலை தான் காரணமா என பல கேள்விகள் இருந்தன அதற்கு பதில் அளிக்கும் வகையில் பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு உண்மையான காரணத்தை கூறி இருக்கிறார். அது என்ன என்பதை பற்றி பார்ப்போம்.. சாக்லேட் பாய் பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடித்து வெற்றி பெற்ற ஜீன்ஸ் திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது அஜித் தானம்.

இந்த படத்தின் கதையை இயக்குனர் ஷங்கர் முதலில் அஜித்திடம் கூறி சம்மதம் வாங்கியுள்ளார். ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக நடிக்க முடியாமல் போனது ஏற்கனவே அஜித் இரு படங்களில் கமிட்டாகி இருந்தார் அதையெல்லாம் விட்டுவிட்டு வாருங்கள் என ஷங்கர் சொன்னாராம். ஆனால் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பதால் அஜித் இந்த படத்தில் விலகி உள்ளாராம். சரி இது போகட்டும் என அடுத்து முதல்வன் படத்தின் கதையை அஜித்தை மனதில் வைத்து தான் ஷங்கர் எழுதினார்.

பின்பு அஜித்திடம் இந்த படத்தின் கதையை சொல்லி இருக்கிறார். அதைக் கேட்டு அஜித் அரசியல் சார்ந்த படம் சமூகம் சார்ந்த படங்களில் நான் நடிக்க எனக்கு இன்னும் தகுதி போதாது என்று சொல்லிவிட்டாராம்.. அடுத்து சிவாஜி படத்தையும் அஜித்தை மனதில் வைத்து தான் எழுதி இருந்தார்  ஆனால் அதுவும் நடக்கவில்லை.. பின்பு ஒரு கட்டத்தில் அஜித்திடம் எந்திரன் படத்தின் கதையை சொல்ல..

அஜித் இந்த பிரம்மாண்டமான படத்தில் நடிக்க எனக்கு விருப்பமில்லை எனவும் ஒருவேளை படம் சரியாக ஓடவில்லை என்றால் தயாரிப்பாளர்கள்  கஷ்டத்தை கொடுக்கும் என்னால் பார்க்க முடியாது என கூறிவிட்டாராம்.. இனி வரும் காலங்களில் இவர்கள் சேருவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

Leave a Comment

Exit mobile version