அஜித் – ஷாலினியின் ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்ட தங்கை ஷாம்லி – கதிகலங்கும் இணையதளம்.

தமிழ் சினிமாவில் ஏராளமான  ரசிகர்களை தக்க வைத்துக்கொண்டிருக்கும் நடிகர்களில் டாப் லிஸ்டில் இருப்பவர் நடிகர் அஜித். ஆரம்ப காலகட்டங்களில் இவரது படங்கள் சில தோல்வியடைந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வரும் அஜித் தற்போது தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த வலிமை திரைப்படம். கடந்த மாதம் 24 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் குறைச்சல் இல்லாமல் இருந்து வருகின்றனர். இதுவரை வலிமை திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூலை குவித்து ஓடிக்கொண்டிருக்கின்றன.

மேலும் அஜித்தின் அடுத்தடுத்த திரைப்பட அப்டேட்டும் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. அந்த வகையில் அஜித் வலிமை படத்தை எடுத்த படக்குழு உடன் இணைந்து அவர் தனது 61வது படத்தில் நடிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து 62வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் நடிகர் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் 1999 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.  திருமணம் செய்துகொண்டு 23 ஆண்டுகளாக குடும்ப வாழ்க்கையில் சிறப்பாக பயணித்து வரும் இவர்களின் அழகிய ரொமான்டிக் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளிவந்துள்ளது.

ஷாலினியின் தங்கை ஷாம்லி இந்த புகைப்படத்தை.. வெளியிட்டு திருமண வாழ்க்கையில் 23 ஆண்டு என பதிவிட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் தீயாய் பரவி வருகின்றன. மேலும் அஜித் மற்றும் ஷாலினிக்கு பலரும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

ajith-and-shalini
ajith-and-shalini

Leave a Comment