நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் தன்னுடைய மகளுடன் செல்பி எடுத்துக் கொண்ட நிலையில் அதனை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் பிரபல நடிகை ஷாலினி அவர்களை காதலித்து கடந்த 2000 ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியினர்களுக்கு கடந்த 2008ஆம் ஆண்டு ஜனவரி3ஆம் தேதி அன்று பெண் குழந்தை பிறந்தது. இவ்வாறு அந்த குழந்தைக்கு அனோஷ்கா என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 15 வயது இளம் பெண்ணாக மாறியுள்ள நிலையில் நேற்று அவருடைய பிறந்தநாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் தன்னுடைய மகளின் பிறந்தநாள் பொழுது மகளுடன் ஷாலினி அஜித் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது. இதனை அடுத்து ஷாலினி தன்னுடைய கணவர் அஜித் மற்றும் குழந்தைகளுடன் புத்தாண்டு தினத்தை கொண்டாடிய பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ள நிலையில் இது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

தற்பொழுது இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக அனோஷ்காவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். அனோஷ்காவிற்கு 15 வயது மட்டுமே ஆகும் நிலையில் கடகடவென வளர்ந்து பெரிய பெண் போல் இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதனை அடுத்து நடிகர் அஜித் துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விரைவில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது ரசிகர்களும் மிகவும் ஆர்வமுடன் இந்த திரைப்படத்திற்காக காத்து வருகிறார்கள். மேலும் இந்த படத்தினை அடுத்து நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் இணைய இருக்கிறார்.
