ajith shalini love secrete: பொதுவாக சினிமாவைப் பொருத்தவரை நடிகைகளுக்கும் நடிகர்களுக்கும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்கும்போது காதல் வளர்வது வழக்கம் தான் அந்த வகையில் பல காதல் ஜோடிகள் தமிழ் சினிமாவில் உள்ளார்கள். அந்தவகையில் சூர்யா ஜோதிகாவை தொடர்ந்து தற்போது ஆர்யா சாயிஷா வரையிலும் அனைவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் தான்.
என்னதான் பல காதல் ஜோடிகள் இருந்தாலும் சரி ரசிகர்கள் கொண்டாடி வரும் ஒரு காதல் ஜோடி என்றால் அது அஜித் ஷாலினி ஜோடி தான். ஷாலினி முதலில் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தான் அறிமுகமானார். பின்னர் படிப்படியாக கதாநாயகி அந்தஸ்தை பெற்று விட்டார்.
இவர் தன்னுடைய சிறு வயதிலேயே சினிமாவில் நுழைந்த ஷாலினி தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்தது மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 90 திரைப்படங்களுக்கும் மேலாக இவர் நடித்துள்ளார்.
என்னதான் பல திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் இவர் மலையாளத்தில் மட்டுமே 25 திரைப்படத்திற்கு மேலாக நடித்துள்ளார் மேலும் நடிகை ஷாலினிக்கு ஷாமிலி மற்றும் ரிச்சர்ட் என்ற அண்ணன் உள்ளார் இவர்கள் இருவரும் கூட சினிமாவில் பிரபலமானவர்கள் தான்.
ஷாமிலி மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி என்ற திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகில் அறிமுகமானார் இந்த அஞ்சலி திரைப்படத்தில் வரும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார் மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து துர்கா தைப்பூசம் செந்தூர தேவி போன்ற பல்வேறு திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சமீபத்தில் கூட விக்ரம்பிரபு நடிப்பில் வெளியான வீரசிவாஜி என்ற திரைப்படத்தில் கூட இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வரும் ஷாமிலி சமீபத்தில் பேட்டி ஒன்றில் அஜித்தை பற்றி பேசியுள்ளார்.
#BabyShamlee About #Ajith #Shalini Love pic.twitter.com/YC4ve4bwUy
— chettyrajubhai (@chettyrajubhai) June 13, 2021