வாரிசை விடாமல் துரத்தும் துணிவு.! ஆடியோ லாஞ்சிலும் இப்படி ஒரு ட்விஸ்ட்டா..

ajith-and-vijay
ajith-and-vijay

வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தை ஹச். வினோத் இயக்கி உள்ளார். போனி கபூர் மிகப்பிரமாண்ட பொருள் செலவில் தயாரித்து உள்ளார். துணிவு படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இதில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடன் இணைந்து ஜான் கொக்கன், யோகி பாபு, சமுத்திரக்கனி, பிக்பாஸ் பிரபலங்களான சிபி, அமீர், பவானி போன்றவர்களும் இந்த படத்தில் சூப்பராக நடித்துள்ளனர். படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது.

அதே தேதியில் விஜயின் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆகிறது இதனால் இந்த இந்த இரண்டு திரைப்படங்களில் எந்த படம் வெற்றிபெறும் என்பதை தெரிந்து கொள்ள மக்கள் மற்றும் ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது இரண்டு படங்களும் திரையரங்குகளை கைப்பற்றவும் பிரமோஷன்களை தீவிரமாகவும் செய்ய முனைப்பு காட்டி வருகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் வருகின்ற 24 ஆம் தேதி விஜயின் வாரிசு பட ஆடியோ லான்ச் மிகப் பிரமாண்டமாக சென்னையில் உள்ள நேரு அரங்கில் கோலாகலமாக நடத்தப்பட இருக்கிறது இதனால் வாரிசு படத்திற்கான பிரமோஷன் பெரிய அளவில் ரீச் ஆகும் என சொல்லப்படுகிறது ஆனால் அதே தேதியில் அஜித்தின் துணிவு படக்குழுவும் ஒரு சம்பவம் செய்ய இருக்கிறது.

இதனால் வாரிசு படக்குழு அதிர்ச்சியில் இருக்கிறதாம். வரும் 24 -ஆம் தேதி அஜித்தின் துணிவு படத்திலிருந்து  மூன்றாவது சிங்கள் ரிலீஸ் செய்ய இருக்கிறது. சரியாக 24 ஆம் தேதி மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இதனால் வருகின்ற 24ஆம் தேதி மிகப்பெரிய ஒரு ட்ரீட்டாக அஜித், விஜய் ரசிகர்களுக்கு இருக்கும் என சொல்லப்படுகிறது.