ஐயையோ அஜிதிற்கு கல்யாணம் ஆயிடுச்சா குப்புறப் படுத்துக்கொண்டு பீல் பண்ணிய சீரியல் நடிகை.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தல அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது.  இத்திரைப்படத்தை ஹஸ் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார்.

அஜித் நடிப்பில் கடைசியாக நேர்கொண்டபார்வை வெளியான இத்திரைப்படம் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் சமூகத்துக்கு தேவையான கருத்தை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டது.

இத்திரைப்படத்திற்கு பிறகு அஜித் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்வதற்காக அதில் கவனம் செலுத்தி வந்தார். அந்தவகையில் தங்கப் பதக்கத்தையும் வென்றார்.  தற்போது தான் அஜித் மீண்டும் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1ஆம் தேதி அஜீத் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என்று கூறி இருந்தார்கள். ஆனால் நேற்று அதிகாரபூர்வமாக மே ஒன்றாம் தேதி பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவராது என்று கூறி உள்ளார்கள் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தல அஜீத்தை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்று ஒரு சீரியல் நடிகை மிகவும் வருத்தம் அடைந்துள்ளார். ஆம் அது வேறு யாருமில்லை சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் பிரியங்கா.

இவர் சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் அஜித் சாரை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்று ஃபீல் பண்ணி உள்ளார்.

Leave a Comment