நெருக்கடியில் தள்ளப்பட்ட தல.! உடனே வலிமை தயாரிப்பாளருக்கு ஈமெயில் தட்டிய அஜித்.! என்ன சொல்வதென்றே தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் போனிகபூர்

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வினோத் இயக்கத்தில் மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்தில் தல அஜித் என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியது.

அதுமட்டுமில்லாமல் இந்தத் திரைப்படத்திற்காக அஜித் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு இளமையான தோற்றத்துடன் இருக்கிறார் என கூறுகிறார்கள். படப்பிடிப்பு முதலில் ஐதராபாத்தில் தொடங்கிய பின்பு சென்னையில் சூட்டிங் நடைபெற்றது, கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வலிமை திரைப் படத்தில் அஜித்திற்கு மூன்று வில்லன்கள் என்றும் அதில் ஒருவர் தெலுங்கு திரை உலகில் இளம் நடிகர் கார்த்தி கேயா நடிப்பதாக கூறப்பட்டுள்ளது அது மட்டுமில்லாமல் முதன்முறையாக பாலிவுட் நடிகை ஹீமா குரோசி அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார். இவர் அஜித்துடன் பைக் சீனில் மரண மாஸ் ஆக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரனோ ஊரடங்கள் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே போகிறது அதனால் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு பொங்கல் ரிலீஸ் செய்யலாமா என படக்குழு திட்டமிட்டார்கள், இந்த பிரச்சனை எல்லாம் ஒரு பக்கம் இருக்க இப்பொழுது மேலும் ஒரு பிரச்சனை கிளம்பி விட்டது. அதாவது கொரோனாவால் தமிழ் திரையுலகமே மிகப் பெரிய அடி வாங்கியுள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் அதனால் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று கூடி ஒரு முடிவுக்கு வந்துள்ளார்கள் அதாவது முன்னணி நடிகர்களின் சம்பளத்தில் 50 சதவீதத்தை குறைத்து கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள்.

ajith latest
ajith latest

இந்த லாக்டவுனால் திரையரங்கங்கள் மூடப்பட்டு சினிமா படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் தயாரிப்பாளர்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளதாள் இந்த சரிவை ஈடுகட்டவும் தயாரிப்பாளர்களை மீட்டெடுக்கவும் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தல அஜித் அதிரடியாக முடிவு எடுத்துள்ளார் அதாவது வலிமை திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூருக்கு ஒரு மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த மெயிலில் அஜித்தின் சம்பள விவரம் பற்றி கூறியுள்ளதாக கூறப்படுகிறது .அதாவது படம் எப்பொழுது ரிலீஸ் செய்யப்படுகிறது அப்பொழுது என்ன நிலைமை என்ன சூழ்நிலை என்பதைப் பொறுத்தே சம்பளம் குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என அஜித் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது, ஏனென்றால் இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் 50% என்பது ஓகே தான் ஆனால் போகப்போக சூழ்நிலை இன்னும் மோசமான நிலையை அடையலாம் என அஜித் யோசித்து இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Leave a Comment