முதல் முறையாக ரசிகர்களுடன் அஜித் எடுத்துக் கொண்ட செல்ஃபி.! வைரலாகும் வீடியோ மற்றும் புகைப்படம்

0

தல அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் வினோத் இயக்கத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படத்தை வருகின்ற ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள், அதேபோல் அஜித் உலகம் முழுவதும் ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார், இவர் ரசிகர்கள் அனைவரும் இவருக்காக எதையும் செய்வார்கள் என்பதை அடிக்கடி உறுதி செய்து வருகிறார்கள்.

ஆனால் அஜித்திற்கு எந்த ஒரு ரசிகர் மன்றமும் இல்லை ஆனால் ரசிகர்கள் கூடம்  இவருக்கு பெரும் அளவில் இருக்கிறார்கள், அதேபோல் அஜித் அதிக நேரம் ரசிகர்களுடன் செலவிடுவதில்லை, ஆனால் ரசிகர்கள் புகைப்படம் எடுக்கணும் என்று கூறினாலோ இல்லை அவரைப் பார்க்க வந்தாலும் தவிர்ப்பதும் இல்லை. ரசிகர்கள் மீது அஜித் அதிக அளவு அன்பு வைத்துள்ளார் என்பதை பலமுறை அவர் நிரூபித்துள்ளார்.

Ajith
Ajith

அதேபோல அஜித் பொது இடங்களுக்கு வருவது மிக அரிதான ஒன்றுதான், அஜித் என்றாலே ரசிகர்கள் கொண்டாட்டம் தான் அவருடன் செல்பி எடுக்க வேண்டும் என பல ரசிகர்களின்  கனவாக இருக்கிறது, இந்த நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக அஜித் ரசிகருடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோவை இணையத்தில் வைரலாகி வருகிறது.