அஜித் தமிழ் சினிமாவில் பல வெற்றி / தோல்வி படங்களை கொடுத்து இருந்தாலும் அவரது ரசிகர்கள் அவரை துவண்டுவிடாமல் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார் அந்த காரணத்தினால் அஜீத்தும் எவ்வளவு கஷ்டப்பட்டாவது வருடத்திற்கு ஒரு படத்தையாவது சிறந்த முறையில் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்துகிறார்.
அப்படி சமீபகாலமாக இவர் நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட் தான் அதிலும் விசுவாசம், நேர்கொண்டபார்வை படங்களைத் தொடர்ந்து தற்போது வலிமை திரைப்படத்தையும் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க ரெடியாக இருக்கிறார். படத்தை வேற ஒரு லெவலில் எடுத்துள்ளார் இயக்குனர் ஹச். வினோத். இந்த படத்தின் சண்டை காட்சிகள் ஒவ்வொன்றும் பார்பவர்களை மெய்சிலிர்க்க வருவதோடு வேற லெவல் கொண்டாட செய்யும் என கூறப்படுகிறது.
சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் Glimpse ஆகியவை ரசிகர்களை கொண்டாட செய்தது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது ஆனால் திரைப்படம் தற்போது தீபாவளிக்கு வெளிவராமல் அதிலிருந்து பின்வாங்கி அடுத்த வருடம் பொங்கலை குறி வைத்துள்ளது.
ரசிகர்களும் நல்ல நாளில் படம் வெளிவந்தால் போதும் அதை நாங்கள் வேற லெவலில் கொண்டாடுவோம் என கூறி வரவேற்றுள்ளனர். வலிமை படத்தின் கடைசி சூட்டிங் ரஷ்யாவில் நடத்தினர் படத்தை முடித்துவிட்டு உடனடியாக அஜித் அங்கிருந்தே பல்லாயிரம் கிலோமீட்டர் பைக்கில் ட்ரிப் போனார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் தீயாய் பரவி வந்தது.
ரஷ்யா முழுவதும் பைக்கில் வலம் வந்தார் அப்போது மேலும் சில இடங்களுக்கு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். அதில் ஒரு புகைப்படம் அஜித் மலைகளுக்கு நடுவே செம்ம மாஸாக எடுத்துக்கொண்டார். அது இணையதள பக்கத்தில் தற்போது தீயாய் பரவி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..
