உச்சக்கட்ட கோபத்தில் பிரபல நடிகையை திட்டிவிட்ட அஜித்.! பல வருடங்கள் கழித்து உண்மையை போட்டு உடைத்த நடிகை.

thala-ajith-like
thala-ajith-like

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித்.  பொதுவாக அஜீத் மற்ற நடிகர்களைப் போல பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வது ரசிகர்களிடம் கலந்துரையாடுவது போன்ற எந்த விஷயங்களிலும் பெரிதாக கலந்து கொள்ள மாட்டார் இவரை பார்ப்பதே மிகவும் கடினம்.

இப்படிப்பட்ட நிலையில் தல அஜித் ஒரு படப்பிடிப்பின் போது பிரபல நடிகை ஒருவரை திட்டி உள்ளார். இந்த உண்மையை பல வருடங்கள் கழித்து தனது 41 வயதில் அந்த நடிகை கூறியுள்ளார். அந்த வகையில் தற்போது வேண்டுமானால் தல அஜித் நடிப்பில் வெளிவரும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வரலாம் ஆனால் ஆரம்பத்தில் தல அஜித் நடிப்பில் சுமாராகத்தான் பல படங்கள் வெற்றி பெற்று வந்தது.

அந்த வகையில் சுமாராக வெற்றி பெற்ற திரைப்படம் உன்னைத்தேடி இத்திரைப்படம் 1999ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் திரைப்படம் வெளிவந்தது. இத்திரைப்படத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடித்திருந்தார். அந்த வகையில் இத்திரைப்படத்தில் அஜித் மற்றும் மாளவிகா நடனமாடும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.

எனவே அப்பொழுது மாளவிகா சரியாக நடனமாட தெரியாமல் அவர் இஸ்டத்துக்கு ஆடியதால் தல அஜித் கோபப்பட்டு மாளவிகாவை மிகவும் கடுமையாகத் திட்டியுள்ளார். அந்த வகையில் ஒழுங்காக மாஸ்டர் சொல்வதை கவனித்துப் பாருங்கள் என்று கோபமாக தல அஜித் கூறியதாக மாளவிகா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.