விஜயை தொடர்ந்து ஸ்மார்ட் சைக்கிளில் வலம் வரும் அஜித் – பார்த்து மிரண்ட ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாக வலம் வருகிறார் நடிகர் அஜித். அண்மையில் வெளியான இவரது திரைப்படங்கள் அனைத்தும் பிரமாண்ட வெற்றியை ருசித்து உள்ளன. இப்ப கூட இரண்டாவது முறையாக ஹச். வினோத்துடன்  கூட்டணி அமைத்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் அஜித்.

இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருந்து பின் சில காரணங்களால் வெளியாகாமல் போனது இருப்பினும் வலிமை திரைப்படம் வருகின்ற மார்ச் மாதத்தில் திரையரங்கில் வெளியாகி அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் வருகின்ற படி வரட்டும் அதற்காக பொறுத்திருக்க வேண்டாம் ரசிகர்களுக்கு இந்த வருடம் இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்க அஜித் முடிவு செய்துள்ளாராம்.

மீண்டும் வலிமை பட குழுவுடன் இணைந்து தனது 61 வது திரைப்படத்தில் நடிக்க முடிவு எடுத்துள்ளார். அடுத்த படத்தின் பூஜை வெகு விரைவிலேயே போட்டுவிட்டு அடுத்ததாக படத்தில் நடிக்க அஜீத் பட குழு முனைப்பு காட்டி உள்ளது அதன்படியே பார்க்கையில் இந்த படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் ராமோஜி பிலிம் சிட்டியில் எடுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.

அஜித்துக்காக ரசிகர்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் அதேபோல  ரசிகர்களுக்காக அஜித்தும் அந்த அளவிற்கு கஷ்டப்பட்டு படங்களில் நடிக்கிறார் என்பதே உண்மை.
இந்த வருடம் அஜித்தின் இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளதால் ரசிகர்களும் செம சந்தோஷத்தில் இருக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜித்.

ஸ்மார்ட் சைக்கிளுடன் நின்று இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்  செம்ம மாஸாக சூப்பராக இருக்கிறீர்கள் என கூறிய அந்தப் புகைப்படத்திற்கு லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் கொடுத்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..

ajith
ajith
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment