BMW பைக்கை தொடர்ந்து கப்பலில் சவாரி செய்யும் அஜித் – இணையதளத்தில் வேகம் எடுக்கும் புதிய புகைப்படம்.!

தமிழ் சினிமா உலகில் அதிகப்படியான ஆண் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்து வைத்திருக்கும்  ஹீரோகளில் ஒருவர் நடிகர் அஜித்குமார் இவர் கடைசியாக வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 61 வது திரைப்படத்தில் தற்போது விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தை ஹச். வினோத் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில்  அஜித்துடன் கைகோர்த்து  மலையாள நடிகை மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, இளம் நடிகர் வீரா என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது முதல்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு முடிந்த நிலையில் 2-வது கட்ட ஷூட்டிங் வெகு விரைவிலேயே தொடங்கப்பட இருக்கிறது.

இதற்கு இடையில் நடிகர் அஜித்குமார் பொழுதைக் கழிப்பதற்காக தனது பிஎம்டபிள்யூ பைக்கை எடுத்துக்கொண்டு தற்போது வெளிநாடுகளில் சுற்றி வருகிறார். தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள்  சுற்றி வருகிறார் அஜித் அதன் புகைப்படங்கள் கூட வெளிவந்து வைரலாகின. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜித்குமார்.

தற்போது அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்துக் கொண்டிருக்கிறார் மிகப்பெரிய கப்பல் ஒன்றில் நடிகர் அஜித் குமார்  இருக்கும் புகைப்படங்கள் கூட தற்போது வெளிவந்து வைரலாகி வருகிறது. ஒரு பக்கம் அஜித் ஓடிக்கொண்டிருந்தாலும் AK 61படத்தை தீபாவளிக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் அதிக முனைப்பு காட்டி வருகிறார் அஜித்.

அதனாலேயே வெகுவிரைவில் இரண்டாவது கட்ட ஷூட்டிங் தொடங்கப்பட இருக்கிறது இதில் அஜித் மற்றும் மலையாள நடிகை மஞ்சுவாரியர் ஆகியோர் நடிக்கும் கதாபாத்திரங்கள் எடுக்கப்பட எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது அத்துடன் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து  விடும் என தெரியவருகிறது.

AJITH
AJITH
AJITH
AJITH

Leave a Comment