வெறித்தனமாக ரோட்டில் பைக் ஓட்டி செல்லும் தல அஜித்.! இணையத்தில் வெளியான அதிரடி வீடியோ.!

தல அஜித் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தகவல் வைரலாகி வருகிறது மேலும் இந்த திரைப்படத்தின் அப்டேட் வெளிவராதா என்று கேட்டு வந்த ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ மற்றும் ஒரு சிங்கிள் வெளியாகி இருக்கிறது.

இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருப்பதால் பல ரசிகர்களும் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு மிக ஆவலாக இருக்கிறார்கள் பொதுவாகவே தல அஜித்தின் திரைப்படம் என்றால் ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருவார்கள்.

என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் பார்த்தால் இந்த திரைப்படம் மட்டும் வெளியாகிவிட்டால் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து விடும் எனவும் பல சினிமா பிரபலங்கள் கூறி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

பொதுவாகவே தல அஜித் மற்ற மனிதர்களைப் போல இயல்பாக வாழ ஆசைப்படும் நபர் என்று கூட கூறலாம் அடிக்கடி இவரது வீடியோ,புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம் அதேபோல் தற்போதும் அஜித்தின் வீடியோ ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

தல அஜித் சாதாரணமாக ரோட்டில் பைக் ஓட்டி கொண்டு செல்லும் பொழுது எடுத்த வீடியோ காணொளி மிக வேகமாக வைரலாகி வருகிறது.அதுமட்டுமல்லாமல் தல அஜித் ஓட்டிக்கொண்டிருக்கும் பைக் ஒரு வித்தியாசமாக இருக்கிறது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் தல அஜித் இடம் இல்லாத பைக்கா என இதனை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment