ஒரு விரலால் கிளட்சை பிடித்து கியர் போடும் தல அஜித் பைக் ஓட்டுவது அப்படித்தான் இணையத்தில் பட்டையை கிளப்பும் புகைப்படங்கள்.!

வெள்ளித்திரையில் தனது அன்பினால் ரசிகர்களை சேர்த்து வைத்த நடிகர் தான் தல அஜித் இவரது திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் என்பது தெரிந்ததுதான் அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான எல்லா திரைப்படங்களும் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து சாதனை படைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தல அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 10 சதவீதம் மட்டும் முடியாமல் இருக்கிறது என சமூக வலைதளப் பக்கங்களில் சமீபத்தில் தகவல் வெளியானது.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை பற்றி ஏதாவது ஒரு அப்டேட் வெளிவருமா என ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருந்த நிலையில் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் தல அஜித்தின் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிற மே 1ம் தேதி அதிகாரபூர்வமாக வெளியாகும் என அறிவித்திருந்தார்.

ஆனால் சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவராது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்கள் ஏனென்றால் கொரோனா தோற்று இரண்டாம் நிலை மிக வேகமாக பரவி வருவதால் ரசிகர்களின் உடல்நலம் கருதி தல அஜித் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தள்ளி வைத்துவிட்டார்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப் படம் ஆரம்பிக்கும்போதே தல அஜித் பைக்கில் ஸ்டண்ட் செய்த புகைப்படங்கள் கூட சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலானது.பொதுவாகவே தல அஜித் பைக் ஓட்டுவது மட்டும் தான் ரசிகர்களுக்கு தெரியும் ஆனால் தல அஜித் பைக்கில் எப்படி கியர் போடுவார் என்பது தெரியாது அந்த வகையில் பார்த்தால் தல அஜித் ஆள்காட்டி விரலால் மட்டும் கிளட்சை பிடித்து  கியர் போடுவார் என்பது பலருக்கும் தெரியாது.

ajith2

அந்த வகையில் பார்த்தால் இவர் மங்காத்தா, வலிமை,என்னை அறிந்தால் போன்ற பல திரைப்படங்களில் அப்படித்தான் வண்டி ஓட்டி இருக்கிறார்.அதற்கான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் மிகவேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை இவரது ரசிகர்கள் பலரும் இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version