Ajith : தமிழ் சினிமாவில் இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து அப்படி துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜித் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளியாகுவது வழக்கம்..
அதன்படி நேருக்கு நேர் திரைப்படத்தில் அஜித் விலகியதற்கான காரணத்தை பிரபல நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து கூறியுள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. அஜித்தை ஒரு தாய்ப்பால் என்று குறிப்பிட்டு இருந்தார் அதாவது தாய்ப்பாலில் யாரும் கலப்படம் கலக்க முடியாது அந்த அளவிற்கு ஒரு தூய்மையான மனிதர் அஜித் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் நேருக்கு நேர் படத்தில் முதலில் அஜித் தான் நடித்தார் ஏன் அவருக்கு பதிலாக சூர்யா வந்தார் என்ற காரணத்தையும் கூறினார் நேருக்கு நேர் படத்தில் மாரிமுத்து உதவியாளராக பணிபுரிந்தார். முதல் 10 நாட்கள் அஜித் நேருக்கு நேர் படத்தில் நடித்தார் அந்த சமயத்தில் தான் அவர் காதல் கோட்டை என்ற ஹிட் படத்தை கொடுத்திருந்தார் அதன் காரணமாக அஜித் மிகவும் பிசியாக இருந்தார்.
அது மட்டுமல்லாமல் சொந்த விஷயங்கள் சிலவற்றில் மன உளைச்சலிலும் இருந்தார். மேலும் நேருக்கு நேர் படத்தை மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்தது ஒரு பக்கம் மணிரத்தினமும், சுஹாசிணியும் அஜித்திற்கு சில நெருக்கடிகள் கொடுத்தார்களாம் அதன் காரணமாக அஜித் நேருக்கு நேர் படத்தை தொடர முடியாமல் போனது.
அஜித்திற்கு பதிலாக பிரசாந்த் நடிக்க வைக்க முயற்சி செய்தோம் ஆனால் அவர் ஜீன்ஸ் படத்தில் கமிட்டாகி இருந்தார் பிரபுதேவா நடிக்க வைக்க கேட்டிருந்தோம் ஆனால் அவர் இன்னொரு ஹீரோ ரிஜகட் செய்த கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டார் கடைசியாக சிவகுமாரின் மகன் சூர்யா அழகாக இருக்கிறார்.
அவரை ஒப்பந்தம் செய்யலாம் என சொன்னோம் ஆனால் சிவகுமார் மறுத்துவிட்டார் சினிமா என்னுடன் போகட்டும் அவன் நடிக்க வரமாட்டான் என சொல்லினார் எப்படியோ சிவகுமாரை சம்மதிக்க வைத்து நேருக்கு நேர் படத்தில் சூர்யாவை நடிக்க வைத்ததாக மாரிமுத்து கூறினார்.