இது என்னுடைய நீண்ட நாள் விருப்பம்.. புதிய நிறுவனம் தொடங்கியது குறித்து அஜித் வெளியிட்ட அறிக்கை

0
ajith 1

பைக் பிரியர்களுக்காக புதிய நிறுவனம் துவங்கி இருப்பதாக நடிகர் அஜித் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் அது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் மகிழ்ச்சியிலிருந்து வருகிறார்கள். கோலிவுட்டில் பிரபல நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் அஜித் இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வருகிறது.

தொடர்ந்து வெற்றினை சந்தித்து வரும் நிலையில் அண்மையில் அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஆனால் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தது என்று தான் கூற வேண்டும். அஜித் குறித்த ஏராளமான தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது அந்த வகையில் கடந்த ஆண்டு அஜித் ஐரோப்பியா சுற்றுப்பயணம் முடித்திருந்த நிலையில் இதனை அடுத்து திருச்சியில் நடந்த ரைபில் கிளப் துப்பாக்கி சூடு போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றார்.

இதனை அடுத்து கடந்த 2021ஆம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் வாழ்க்கையில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் வலிமை படத்தினை தொடர்ந்து அஜித் மீண்டும் தனது பைக் பயணத்தை தொடங்கி இருக்கும் நிலையில் சமீபத்தில் அஜித்தின் பைக் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது நடிகர் அஜீத் ரசிகை ஒருவரை விபத்தில் இருந்து காப்பாற்றி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடிகர் அஜித் நேபாளத்தில் பைக்கில் சுற்றிய வீடியோக்கள் வைரலானதை அடுத்து இது ஒருபுறம் இருக்க நடிகர் அஜித் உலக பயணத்தை மேற்கொண்டு உள்ளார். அந்த பயணத்தை பிரபல ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா தன் கேமராக்களால் பதிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த உலக சுற்றுப்பயணமானது அஜித்தின் வாழ்க்கையிலேயே அவர் நிகழ்த்தியிருக்கும் மாபெரும் சாதனையாக இருக்கப் போவதனால் இதனை பதிவு செய்கிறாராம் நடிகர் அஜித். மேலும் முதல் கட்ட சுற்றுப்பயணம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிகிறது. அந்த மொத்த சுற்றுப்பயணமும் முடிந்ததும் இந்த பதிவை ஒரு ஆவண படமாக அஜித்குமார் வெளியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

ajith
ajith

இந்நிலையில் பைக் விரும்பிகளுக்காக ஏகே மோட்டோ ரைடு என்ற பெயரில் சுற்றுலா நிறுவனம் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக நடிகர் அஜித் வெளியீட்டுள்ள அறிக்கையில் இந்த மேற்கோளை நான் நீண்ட காலமாக விரும்பி வாழ்ந்து வருகிறேன், வாழ்க்கை ஒரு அழகான பயணம், அதன் எதிர்பாராத தருணங்கள் திருப்பங்கள் மற்றும் திறந்த பாதைகளை கொண்டாடுங்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் வெளிப்புறங்களில் தனது ஆர்வத்தை ஒரு தொழில் முறை முயற்சியாக மாற்றும் விதத்தில் ஏகே மோட்டோ ரைடு என்ற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தைக் கொண்டு வந்திருக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சம் நிலப்பரப்புகளில் மட்டும் இன்றி அழகான சர்வதேச சாலைகளிலும் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ் சாகச ஆர்வலர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு ஏகே மோட்டோ ரைடு சுற்றுப்பயணங்களை வழங்கும் பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் சுற்றுப்பயணங்கள் முழுவதிலும் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்து உன்னிப்பாக பராமரிக்கப்படும் சாகச சுற்றுலா சூப்பர் பைக்குகளை ஏகே மோட்டோ ரைடு வழங்கும் தொழில்முறை வழிகாட்டிகள் மோட்டார் சைக்கிள் சுற்றுப் பயணங்களின் நுணுக்கங்களையும் நன்கு அறிந்தவர்கள் மற்றும் உள்ளூர் பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுகள் பற்றிய விரிவான அறிவை கொண்டவர்கள் தொடங்கும் முதல் இறுதி வரை ரைடர்களுக்கு தடையற்ற மற்றும் அதிவேக அனுபவத்தை வழங்குவார்கள் என தெரிவித்துள்ளார்.