பழைய இயக்குனருடன் மீண்டும் கைகோர்க்கும் அஜித் – AK 63 படத்தை எடுக்கப் போவது இவரா.?

நடிகர் அஜித் குமார் அண்மை காலமாக சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய ஹிட் படங்களை தொடர்ந்து தற்பொழுது தனது 61 வது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் நடித்து உள்ளார்.

இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது அஜித்துடன் கைகோர்த்து இந்த படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர்,  இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய், ஜான் கொக்கன் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர் படத்தின் படபிடிப்பு அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த..

நிலையில் தற்போது டப்பிங் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது. அண்மையில் கூட நடிகர் அஜித்குமார் டப்பிங் பேசிய பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலானது. துணிவு படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு கோலாகலமாக ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் தனது 62 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

அந்த படத்தை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருக்கிறார் . அந்தப் படத்தில் அஜித்துடன் கைகோர்த்து நயன்தாரா ஹீரோயின்னாக நடிக்க இருக்கிறாராம் மேலும் ஒரு சிலர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. AK 62 படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் யாருடன் இணைவார் என பலரும் கேட்டு வந்த நிலையில் தற்பொழுது ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது அஜித்தின் 63 வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் தான் இயக்க இருக்கிறார் என சொல்லப்படுகிறது. இவர் ஏற்கனவே அஜித்துடன் கைகோர்த்து பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரவில்லை ஆனால் இந்த செய்தி பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

Leave a Comment