தல அஜித் நடிக்க மறுத்து மெகா ஹிட் ஆன திரைப்படங்கள். அதுவும் இத்தனை திரைப்படங்களா.

0

தமிழ்சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவர் அஜித், இவர் தற்பொழுது வலிமை என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தை இயக்குனர் வினோத் இயக்குகிறார். இந்த நிலையில் அஜீத் தற்போது வரை 11 திரைப்படங்களில் நடிக்க மறுத்துள்ளார், திரைப்படங்கள் அனைத்தும் வேறு சில நடிகர்கள் நடிக்கப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

நடிகர் அஜித் சாருமதி என்ற படத்தில் 1997-ம் ஆண்டு முதன்முதலாக நடிக்க மறுத்தார். தல தளபதி இரண்டு பேருமே இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் 1999 ஆம் ஆண்டு நேருக்கு நேர் படத்தில் இணைந்தார்கள் ஆனால் சில காரணங்களால் அஜித் அந்த திரைப்படத்தில் இருந்து விலகிக்கொண்டார் அஜித். அதேபோல் 2000 ஆண்டில் அஜீத் மற்றும் ஜோதிகா நடிப்பில் உருவாகிய திரைப்படம் நியூ இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகிவிட்டது ஆனால் இந்தத் திரைப்படத்தையும் அஜித் தவிர்த்துவிட்டார்.

சேது படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பாலா அஜித்தை வைத்து நந்தா திரைப்படத்தை தொடங்கினார் ஆனால் இந்த திரைப்படமும் பாதியில் கைவிடப்பட்டது பிறகு சூர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்தது, அதேபோல் அஜித் சிட்டிசன் பட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சரவண சுப்பையா உடன் மீண்டும் இதிகாசம் என்ற திரைப்படத்தில் இணைந்தார் அஜித், வரலாற்றுப் பின்னணியில் உருவான இந்த படத்தை தல அஜித் எந்த காரணமுமின்றி கைவிட்டார்.

அஜித்தின் ஃபேவரைட் இயக்குனர் சரண் மூன்றாவது முறையாக தல அஜித்தை வைத்து ஏறுமுகம் என்ற திரைப்படத்தை தொடங்கினார் ஆனால் இந்த கதையில் திருப்தி இல்லாத காரணத்தினால் தல அஜித் இந்த திரைப்படத்தை கைவிட்டார், அதன் பின்புதான் ஜெமினி என்ற டைட்டிலில் விக்ரம் நடித்து மிகப்பெரிய ஹிட்டடித்தது.

அதேபோல் 2002 ஆம் ஆண்டு போலீஸ் அதிகாரி வேடத்தில் உருவாகிய மகா என்ற திரைப்படத்தையும் அஜித் கைவிட்டார், அதேபோல் மருத்துவர் வேடத்தில் நடித்த திருடா படமும் பாதியில் கைவிடப்பட்டது.

பின்பு வரலாறு பட வெற்றியை தொடர்ந்து தல அஜித் மற்றும் கே எஸ் ரவிக்குமார் மீண்டும் இணைந்தார் காங்கேயம் என்ற திரைப்படமும் பாதியில் கைவிடப்பட்டது. பின்பு பாலாவுடன் இணைந்து நான் கடவுள் திரைப்படத்தில் இணையும் வாய்ப்பு கிடைத்தது அஜித்திற்கு ஆனால் பாலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த திரைப்படத்தையும் நடிக்க மறுத்துவிட்டார்.

பின்பு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மிரட்டல் என்ற திரைப்படத்தில் நடிக்க இருந்தார் அஜித் ஆனால் அந்த திரைப்படத்தில் மொட்டை அடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக படத்திலிருந்து விலகிக் கொண்டார் பின்பு சூர்யா நடித்து கஜினி என்ற டைட்டிலில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடைந்தது