சங்கர் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க அஜித்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த கதாபாத்திரம் மங்காத்தா அல்லது விக்ரம் திரைப்படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் போல் மாஸாக இருக்கும் எனவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
சங்கர் இயக்கத்தில் தற்பொழுது ராம்சரண் தேஜா நடிப்பில் ஆர்சி 15 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் சங்கர் தற்பொழுது இந்தியன் 2 என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார் இந்த இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பும் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது இந்த நிலையில் ஆர் சி 15 என்ற திரைப்படத்தில் ஒரு சிறப்பு தேற்றத்தில் மாஸ் வில்லனை களம் இறக்க சங்கர் முடிவெடுத்துள்ளார் அதற்காக அஜித்திடம் பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். இதற்கு முன் அஜித் ஒரு சில திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதால் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு ஓகே சொல்வாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சமீப காலமாக வில்லன் கதாபாத்திரத்தில் மிகப்பெரிய நடிகர்கள் நடித்து படமும் மாபெரும் கிட்டடித்து வருகிறது அந்த வகையில் விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார் படமும் மாபெரும் ஹிட்டடித்தது அதேபோல் இந்த திரைப்படத்திலும் ஒரு மாஸ் கேரக்டரில் அஜித்தை நடிக்க வைக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் அடுத்த பாகம் வெளியானால் அந்த மாஸ் கேரக்டர் வில்லன் கதாபாத்திரம் இரண்டாவது பாகத்தில் முழு வில்லனாக நடிக்க வேண்டிய இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த தகவல் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை ஆனால் அஜித் தரப்பிலிருந்து ஏதாவது ஒரு அப்டேட் வெளியானால் மட்டுமே உறுதியாக தெரிய வரும். இதன் அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகுமா என்பதை பொறுத்திருந்துதான் நாம் பார்க்க வேண்டும்.