ஏகே 62 படத்தில் போலீஸாக நடிக்கும் அஜித்.? வில்லன் யார் தெரியுமா.? வெளிவந்த பரபரப்பு தகவல்

தமிழ் சினிமாவில் அதிக தோல்வி படங்களை கொடுத்த நடிகர்களில் ஒருவர் அஜித். ஆனால் அது எல்லாம் மாறும் என உறுதியாக நம்பி தொடர்ந்து சினிமா உலகில் பயணித்தார் அதன்படி கடந்த சில வருடங்களாக அவர் நல்ல கதைகளில் நடிப்பதால் அவருடைய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்கிறது. இதனால் அஜித்தின் மார்கெட் நாளுக்கு நாள் உயருகிறது.

கடைசியாக கூட இவர் நடித்த துணிவு திரைப்படம் நல்ல கருத்துக்கள் நிறைந்த ஒரு படமாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் 230 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றிகண்டது அதனைத் தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க ஏகே 62 படத்தில் நடிக்க ரெடியாகி உள்ளார்.

முதலில் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்தது. ஆனால் அவர் சொன்ன கதை அஜித் லெவலுக்கு இல்லாததால் அவரை விலகியது இதனை எடுத்து மகிழ் திருமேனியை ஏகே 62 படத்துக்கு போட்டு உள்ளது வெகு விரைவிலேயே அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளிவரும் என சொல்லப்படுகின்றன.

ஏகே 62 படம் மிகப்பெரிய action படமாக உருவாக உள்ளதாம் படத்தில் அஜித் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாம்.  வில்லனாக நடிக்க அருண் விஜய் மற்றும் அருள் நிதியின் பெயர்கள் அடிப்பட்ட  நிலையில் தற்போது பாலிவுட் டாப் ஹீரோ அஜய் தேவகன் பெயர் இடம் பெறுகிறது.

அப்படி நடிகர் அஜித்தும், விஜய் தேவகனும் ஒரே படத்தில் இணைந்தால் அந்த படம் உலக அளவில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல் இந்த பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கவும் வாய்ப்பு இருப்பதாக பலரும் கூறுகின்றனர். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.

Leave a Comment