ஒரே ஒரு படத்தின் மூலம் கர்நாடக மக்களை கவர்ந்த அஜித்.! முதல் இரண்டு இடம் இவருக்கு தான்.! அப்போ மத்தவுங்க.

0

தமிழ்சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக விளங்குபவர் தல அஜித். இவர் சினிமாவில் இருந்து கொண்டு பல நலத்திட்ட உதவிகளை மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு கொண்டுவருகிறார். மேலும் தனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்காக சமூக அக்கறை  உள்ள படங்களை கொடுப்பதன் மூலம் இவர் தமிழ்நாட்டையும் தாண்டி இந்திய அளவில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகின்றன சினிமாவில் பல தோல்வி படங்களை கொடுத்தாலும் அவருக்கு உறுதுணையாக பக்கபலமாகவும் அவரை சூழ்ந்து கொண்டு வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தையும் அதனை மிகப்பெரிய வெற்றிப்படமாக உருமாற்ற அவரது ரசிகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அப்படத்தை வசூல் ரீதியாக மிகப்பெரிய  வெற்றி அடைய செய்கின்றனர்.

தற்பொழுது அஜித் அவர்கள் வலிமை படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் ஷூட்டிங் 60% முடிவடைந்த நிலையில் மீதி படப்பிடிப்பு ஊரடங்கு உத்தரவும் முடிந்தபின் ரசிகர்கள் ஆரவாரத்துடன் எடுக்கப்படும் என தெரியவருகிறது இந்த நிலையில் அஜித் படம் போன்ற சாதனை படைத்துள்ளது.

தல அஜித் அவர்கள் கடந்த ஆண்டு நடிப்பில் மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் விசுவாசம். இத்திரைப்படம் பிற மொழிகளில் டப் செய்யப்பட்டு திரையரங்கில் வெளியிடப்பட்டது  இத்திரைப்படம் பிற மொழிகளிலும் நல்ல வசூலைப் பெற்றது.

ajith
ajith

ஊரடங்கு உத்தரவு காரணமாக படத்தை டிவியில் ஒளிபரப்ப பட்டு வருகிறது அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் அஜித்தின் விசுவாசம் படம்  அந்த மொழியில் ஒளிபரப்பப்பட்டது. முதல் தடவையாக கர்நாடக டிவிகளில் ஒளிபரப்பப்பட்டது சுமார் 50 லட்சம் பேர் பார்த்தனர் அதன்பிறகு இரண்டாவதாக ஒளிபரப்பப்பட்ட பொழுது 56 லட்சம் பேர் இதனை பார்த்து கண்டுகளித்துள்ளனர்.

கர்நாடக டிவிகளில் ஒளிபரப்பப்பட்டு அதிகம் பேர் பார்த்த லிஸ்டில் அஜித்தின் விசுவாசம் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளது மூன்றாவது இடத்தை தளபதி விஜய் நடித்து மிகப்பெரிய ஹிட் நடித்த பிகில் திரைப்படம் இருக்கிறது. முதல் இரண்டு இடத்தில் தல அஜித்தின் படம் இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் காணப்பட்டு வருகின்றனர்.